For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா முதுகில் குத்திய வெஸ்ட் இண்டீஸ்.. ஃபாலோ ஆன் தவிர்க்கப்படுமா? கடும் கோபத்தில் பிசிசிஐ

ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடுகிறது. இது உலக டெஸ்ட் சைக்கிள் சாம்பியன்ஷிப்பில் இந்தியா விளையாடும் முதல் போட்டியாகும்.

இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றால் அது அவர்களுடைய புள்ளிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

West indies big ploy to make the 2nd test vs india to end in drew

இதனால் டிராவை விட வெற்றியை நோக்கி தான் அனைத்து அணிகளும் தற்போது போராடி வருகிறார்கள். ஏனென்றால் பைனலுக்கு முதலில் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி தான் பைனல் வாய்ப்பு என்பதால் ஒரு போட்டியில் டிராவானால் கூட அது ஃபைனல் செல்ல முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்களது அணி தோற்கக் கூடாது என்பதற்காக ஒரு செயலில் ஈடுபட்டு இருக்கிறது.

அந்த வகையில் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தயாரித்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்த ஆடுகளத்தில் விக்கெட் வீழ்த்துவது மிகவும் கடினமாக மாறிவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக விக்கெட்டுகளை வீழ்த்த போராடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் மோசமாக இருப்பதால் அவர்களால் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாது என்பதற்காக அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் இன்னும் முதல் இன்னிங்ஸ் முடியவில்லை. இதன் காரணமாக இந்த ஆட்டம் டிராவில் முடிய அதிக வாய்ப்பு இருக்கிறது. இது இந்திய அணியின் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை பாதிக்க வைக்கும். இதனால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று இந்திய வீரர்கள் முயற்சி செய்ய உள்ளனர்.பாலோ ஆனை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் க்கு வெறும் ஒன்பது ரன்கள் தான் தேவைப்படுகிறது.

இதன் காரணமாக இந்திய அணி பேட்டிங் செய்து மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியை 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதெல்லாம் சவாலான காரியம். இதனால் இந்த ஆட்டம் டிராவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற முடியும். இந்தியாவின் வெற்றியை தடுக்க வேண்டும் என்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் வாரியம் இவ்வாறு செயல்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியின் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Sunday, July 23, 2023, 17:52 [IST]
Other articles published on Jul 23, 2023
English summary
West indies big ploy to make the 2nd test vs india to end in drew இந்தியா முதுகில் குத்திய வெஸ்ட் இண்டீஸ்.. ஃபாலோ ஆன் தவிர்க்கப் படுமா? கடும் கோபத்தில் பிசிசிஐ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+