For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இந்திய அணி மூலம் உலகிற்கு செய்தி சொல்வோம்”.. ஒருநாள் கிரிக்கெட் தொடர்.. நிகோலஸ் பூரண் எச்சரிக்கை!

ட்ரினிடட்: இந்திய அணியின் மூலம் உலக நாடுகளுக்கு ஒரு செய்தி சொல்லவுள்ளோம் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு சென்றுள்ளது.

அங்கு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதுகிறது.

இரு அணிகளின் பலம்

இரு அணிகளின் பலம்

இந்திய அணியை பொறுத்தவரையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ரோகித், கோலி, பண்ட், பும்ரா என முக்கிய வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இதனால் ஷிகர் தவான் தலைமையில் புதிய படை உருவாக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் நிகோலஸ் பூரண் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ச்சியாக பாகிஸ்தான், வங்கதேச அணிகளுடன் ஒருநாள் தொடரை இழந்து, கம்பேக் கொடுக்க காத்துள்ளது.

இந்திய அணிக்கு எச்சரிக்கை

இந்திய அணிக்கு எச்சரிக்கை

இந்நிலையில் இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து நிகோலஸ் பூரண் பேசியுள்ளார். அதில், வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கான மனநிலைக்கு வரவில்லை. அது வந்துவிட்டால் தரமான கம்பேக் கொடுப்போம். அந்த வகையில் இந்தியாவுடனான போட்டியின் மூலம் கிரிக்கெட் உலகிற்கு நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் என தகவல் கொடுப்போம்.

ஏமாற்ற முடியாது

ஏமாற்ற முடியாது

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாதது சுலபமாக தெரியலாம். ஆனால் அதை கண்டு நாங்கள் ஏமாறப்போவதில்லை. குறைத்து மதிப்பிடமாட்டோம். ஏனென்றால் அவர்களின் பணிகளை செய்ய பல வீரர்கள் உள்ளனர். எனவே எங்களை பொறுத்தவரையில், கடுமையான போராட்டத்தை இந்தியாவுக்கு எதிராக கொடுப்போம். முடிவு குறித்து எங்களுக்கு கவலையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜூலை 22ம் தேதியன்று ட்ரினிடாட் க்யூன்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸையும் அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, July 20, 2022, 20:02 [IST]
Other articles published on Jul 20, 2022
English summary
Nicholas pooran warning ahead of India vs west indies ODI series ( இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் ) இந்திய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+