Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - இறுதிப் போட்டியில் மோதும் அணி எது? கிறிஸ் கெயில் சொன்ன அதிர்ச்சி ஆருடம்

மெல்போர்ன் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் நான்கு நாட்கள் எஞ்சி உள்ளது. அனைத்து அணிக்கும் இறுதி கட்ட தயாரிப்பு பணியில் களம் இறங்கியுள்ளது.

வரும் 16ஆம் தேதி முதல் சுற்று போட்டிகள் நடைபெறும் நிலையில், சூப்பர் 12 சுற்று 22ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேற போகும் இரண்டு அணிகள் எது என்று கிறிஸ் கெயிலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

4 அணிகள்

4 அணிகள்

டி20 கிரிக்கெட்டில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது கணிப்பது மிகவும் கடினமாகும். ஆனால் அரை இறுதி சுற்று வரை முன்னேறும் அணி எது என்று கேட்டால் ஓரளவுக்கு சரியாக கணிக்க முடியும். அந்த வகையில் பலரும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ,நியூசிலாந்து அணிகள் அரை இறுதி வரை செல்லும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

கெயில் ஆருடம்

கெயில் ஆருடம்

ஆனால் கெயில், வித்தியாசமான ஒரு பதிலை அளித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அதாவது ஆஸ்திரேலியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதும் என்று அவர் ஆருடம் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது வெஸ்ட் இண்டீஸ் டீமுக்கு இந்த தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்பது சந்தேகமே இல்லை.

வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ்

புதிய கேப்டன் அணியை வழிநடத்துகிறார் ஆண்டிரு ரசூல், பிராவோ ஆகியோர் அணியில் இல்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள் அவர்கள் எதிரணி வீரர்களுக்கு ஆபத்தை தருவார்கள். ஆடுகளத்திற்கு ஏற்ப அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டால் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான அணியாக விளங்கும்.

தோல்வி

தோல்வி

கிறிஸ் கெயிலின் இந்த பதிலை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டி20 போட்டியில் கூட வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி தழுவியது. சிம்ரன் ஹெட்மயர் போன்ற நட்சத்திர வீரர் விமானத்தை பிடிக்கவில்லை என்ற காரணத்தால் அணியை விட்டு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீக்கி இருக்கிறது. இது அணியை மேலும் பலவீனப்படுத்தி இருகிறது.

Story first published: Wednesday, October 12, 2022, 17:18 [IST]
Other articles published on Oct 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+