Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆளாக 1000 சிக்ஸர்.. கெயிலுக்கு அடுத்து இதை செய்த ஒரே வீரர் பொல்லார்ட்!

டல்லாஸ்: வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கீரான் பொல்லார்டு, டி20 கிரிக்கெட் வரலாற்றில் 1000 சிக்ஸர்களை விளாசி புதிய சரித்திர சாதனை படைத்துள்ளார். இந்த இமாலய மைல்கல்லை எட்டிய உலகின் 2வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி - MLC) தொடரின் எலிமினேட்டர் சுற்றில், எம்ஐ நியூயார்க் அணிக்காக விளையாடிய பொல்லார்டு, வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிராக இந்த மைல்கல்லை எட்டினார். இந்தப் போட்டியில் 4வது வீரராக களம் இறங்கிய அவர், 250க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெறும் 25 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இதில் 8 இமாலய சிக்ஸர்கள் அடங்கும்.

West Indies legend Kieron Pollard surpassed 1000 T20 Sixes second batter after Chris Gayle

இந்தப் போட்டிக்கு முன்பாக 1000 சிக்ஸர்களை எட்ட அவருக்கு 7 சிக்ஸர்கள் தேவைப்பட்ட நிலையில், அவர் 8 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தனது ஒட்டுமொத்த டி20 சிக்ஸர்கள் எண்ணிக்கையை 1001 ஆக உயர்த்தினார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய உலக சாதனையை வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் தன் வசம் வைத்துள்ளார். அவர் 463 போட்டிகளில் 1056 சிக்ஸர்கள் அடித்துள்ளார். தற்போது 745 போட்டிகளில் விளையாடியுள்ள பொல்லார்டு, கெயிலின் சாதனையை முறியடிக்க இன்னும் 56 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

இங்கிலாந்து வீரரை மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர் குர்னூர் பிராருக்கு தண்டனை.. ஐசிசி அதிரடி நடவடிக்கை

இங்கிலாந்து வீரரை மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர் குர்னூர் பிராருக்கு தண்டனை.. ஐசிசி அதிரடி நடவடிக்கை

இந்தப் பட்டியலில் 3வது இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவரே இருக்கிறார். ஆண்ட்ரே ரசல் 792 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து முதல் 3 இடங்களையும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களே ஆக்கிரமித்துள்ளனர். 39 வயதிலும் பொல்லார்டு படைத்துள்ள இந்த சிக்ஸர் சாதனைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Thursday, July 16, 2026, 19:03 [IST]
Other articles published on Jul 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+