Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்...மைக்கேல் ஹோல்டிங்கின் அடுத்த கண்டுபிடிப்பு

லண்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங், பும்ரா புதிய பந்தை வீசுவதற்கு சரியான ஆள் இல்லை என கருத்து கூறி இருக்கிறார்.

இதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின், பண்டியா சிறந்த ஆல்-ரவுண்டர் இல்லை, அவரது பேட்டிங்கும் சரியில்லை, பந்துவீச்சும் சரியில்லை என சரமாரியாக குற்றம் சாட்டினார். இவரை அடுத்த கபில் தேவ் என கூறுவது சரியில்லை எனவும் கூறினார்.

West Indies Legend Michael Holding says Bumrah is not a new ball bowler

ஆனால், பண்டியா மூன்றாவது டெஸ்டில் 7 விக்கெட்கள், 52 பந்துகளில் 52 ரன்கள் என தன் திறமையை நிரூபித்தார். போட்டி முடிந்த பின், நான் கபில் தேவ் இல்லை, பண்டியாவாகவே இருக்கிறேன் என பண்டியா கூறினார். ட்விட்டரிலும் ஹோல்டிங்கை விமர்சித்து ரசிகர்கள் கலாய்த்தனர்.

பண்டியா விஷயத்தில் வாங்கிக் கட்டிக் கொண்ட ஹோல்டிங், தற்போது பும்ராவை பற்றி பேசி இருக்கிறார். பும்ரா புதிய பந்தில் பந்துவீச முடியாது, அவர் பயன்படுத்தி தேய்ந்த பந்தில் தான் நன்றாக வீசுவார் என தன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மேலும், பும்ரா வீசும் முறை இங்கிலாந்து சூழ்நிலை காரணமாக எடுபடுகிறது. இதே முறை ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்காவில் எடுபடாது எனவும் கூறினார். பும்ரா மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பண்டியா பற்றிய இவரது விமர்சனங்களுக்கு வரும் எதிர்வினை குறித்து கேட்ட போது, தான் கூறியதை மீண்டும் படித்துப் பார்த்தால், நான் பண்டியாவை விமர்சிக்கவில்லை, பண்டியாவை கபில் தேவோடு ஒப்பிட்டு பேசுபவர்களை தான் விமர்சித்தேன் என புரியும் என சமாளித்தார்.

பண்டியா தன் மீதான விமர்சனத்தை ஒரே போட்டியில் உடைத்துக் காட்டியது போல், அடுத்த போட்டியில் பும்ரா புதிய பந்தை வீசி விக்கெட் எடுத்துவிட்டால், மறுபடியும் ட்விட்டர்வாசிகளுக்கு கொண்டாட்டம்தான். ஹோல்டிங் தான் பாவம்.

Story first published: Saturday, August 25, 2018, 14:30 [IST]
Other articles published on Aug 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+