For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னா பாசம்யா..விராட் கோலியை தேடிவந்து சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்.. கேரி சோபர்ஸ் நெகிழ்ச்சி!

பார்படோஸ்: 86 வயதிலும் கிரிக்கெட்டை தீவிரமாக பின்பற்றி வருபவர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ். ஆஸ்திரேலியா ஜாம்பவான் டான் பிராட்மேன், 5 பேர் விளையாட வேண்டிய ஆட்டத்தை சோபர்ஸ் ஒருவர் விளையாடுகிறார் என்று பாராட்டு பெற்றுள்ளார்.

93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேரி சோபர்ஸ் 8,032 ரன்களும், 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சரியாக சொல்ல வேண்டுமென்றால் விராட் கோலியும், ஜாகீர் கானையும் இணைத்து செய்த கலவையாக திகழ்ந்தவர் கேரி சோபர்ஸ். ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி சார்பாக வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது கேரி சோபர்ஸ் பெயரால் தான் வழங்கப்பட்டு வருகிறது.

West Indies Legend Sir Gary Sobers met Virat Kohli and other Indian Players during the practice session

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய வீரர்களை கேரி சோபர்ஸ் சந்தித்து சில நேரம் உரையாடியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராவதற்காக கடந்த வாரமே ரஹானே தலைமையிலான இந்திய வீரர்கள் சிலர் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டனர்.

இதன்பின்னர் 3 நாட்களுக்கு முன் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணியுடன் இணைந்தனர். இதையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் பீச் வாலிபால் விளையாடும் வீடியோ வெளியாகியது. இன்னும் ஒரு வாரத்தில் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வலை பயிற்சியின் போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை இந்திய வீரர்கள் சந்தித்தனர். குறிப்பாக கேரி சோபர்ஸை விராட் கோலி சந்தித்து உரையாடிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலரும் கேரி சோபர்ஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த முறை விவியன் ரிச்சர்ட்ஸை விராட் கோலி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 5, 2023, 10:02 [IST]
Other articles published on Jul 5, 2023
English summary
WI vs IND: West Indies Legendary Cricketer Sir Gary Sobers met Virat Kohli and other Indian Players during the Net practice session in Barbados.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+