Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலையை தாக்கிய பந்து.. மயங்கி விழுந்த மே.இ.தீவுகள் வீரர்.. அதிர்ச்சி வீடியோ

காலே; இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது

முதல் டெஸ்ட் போட்டி காலேவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால் இலங்கை வீரர்கள் ரன்களை சேர்த்து வருகின்றனர். ஆனால் இந்தப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது

மயங்கிய வீரர்

இந்த ஆட்டத்தின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் ராஸ்டன் சேஷ், பந்துவீசினார். இந்த பந்தை கருணரத்னா ஒங்கி பேட்டால் அடிக்க, பந்து ஷாட் லேக்கில் நின்ற அறிமுக வீரர் ஜெரிமி சோலான்சோ ஹெல்மேட் மீது பட்டது. இதில் ஜெர்மி சோலாண்சோ சுருண்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவக் குழுவினர் உடனடியா ஜெர்மியை ஸ்டேரச்சரில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்

மருத்துவமனை

மருத்துவமனை

காயமடைந்த மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜெரிமி தற்போது சுயநினைவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் காயத்தின் தன்மையை ஆய்வு செய்ய அவருக்கு தலையில் ஸ்கேன் எடுக்கப்பட உள்ளது.இதன் முடிவு வந்த பிறகே, அவர் இந்தப் போட்டியில் களமிறங்குவாரா இல்லையா என்ற தெரியவரும். இதனிடையே மைதானத்தில் அவர் சுருண்டு விழுந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொடக்கம்

தொடக்கம்

முதல் இன்னிங்சில் ஆடி வரும் இலங்கை அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களான நிஷாங்கா, கருணரத்னே ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 139 ரன்களை சேர்த்த நிலையில், நிஷாங்கா 56 ரன்களில் ஆட்டமிழந்தார்

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

மற்றொரு தொடக்க வீரரான கருணரத்னே சதத்தை நோக்கி விளையாடி வருகிறார். தற்போது 56 ஓவர் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. விக்கெட்டுகளை வீழ்த்த மேற்கிந்தியத் தீவுகள் அணி போராடி வருகிறது.

Story first published: Sunday, November 21, 2021, 15:28 [IST]
Other articles published on Nov 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+