பயபுள்ளக தண்ணியைப் போட்டு விளையாடிருச்சுக போல.. கிளைவ் லாயிட் போடும் குண்டு!
புனே: இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கு இந்தியத் தீவு வீரர்கள் விளையாடி விதம் படு மோசம். ஏதோ குடித்து விட்டு வந்து விளையாடியது போலவே இருந்தது அவர்களது ஆட்டம் என்று முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஜாம்பவான் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் விளையாடினார்களா மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் என்ற ரீதியில் லாயிட் பேசியிருப்பது சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
சச்சினின் கடைசி இரு போட்டிகளாகும் இவை. இந்த இரண்டிலுமே இந்தியாதான் வென்றது. கிளைவ் லாயிடின் பேட்டியிலிருந்து சில...

ஆட்டமா ஆடினார்கள்...
டேரன் சமி தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி விளையாடியது மிகவும் மோசமாக இருந்தது. கிரிக்கெட்டா ஆடினார்கள்...

தண்ணி போட்டிருப்பாங்களோ...
அவர்கள் டி20 ஹேங் ஓவரில் இருந்தது போலத் தெரியவில்லை. மாறாக மது போதையில் இருந்தது போலத்தான் எனக்குப் படுகிறது.

டி20 போட்டிக்கு ஒரு அளவுள்ளது
டுவென்டி 20 போட்டிகள் வருமானத்தைக் கொடுக்கின்றன, கிரிக்கெட் பக்கம் மக்களை ஈர்க்க உதவுகின்றன. ஆனால் அளவோடு அவை இருக்க வேண்டும். அளவைத் தாண்டுவது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

டெஸ்ட் பரீட்சைன்னா.. டி20 காட்சிப் போட்டி மாதிரி
டெஸ்ட் போட்டியை பரீட்சை போல கருத வேண்டும். டுவென்டி 20 போட்டியை காட்சிப் போட்டி மாதிரி பாவிக்க வேண்டும். இவை சரியாக இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும்.

டெஸ்ட் ஆடாட்டி எப்படி சிறக்க முடியும்
இளம் வீரர்கள் எடுத்த எடுப்பிலேயே டுவென்டி 20 போட்டிகளுக்குப் போய் விட்டால் அவர்களால் சிறந்த வீரர்களாக வர முடியாது. டெஸ்ட் போட்டியில் ஜொலித்தால்தான் அவர்கள் சிறந்த வீரராக முடியும்.

மோசமான ஆட்டம்
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் இரு ஆட்டமும் மோசமாகவே இருந்து. இது எனக்கு வருத்தம் தருகிறது என்றார் லாயிட்.

அடுத்து ஒரு நாள் தொடர்..
அடுத்து இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவுகளும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடவுள்ளன. முதல் போட்டி நவம்பர் 21ம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications