Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பழைய பன்னீர்செல்வமாக திரும்பிய வெஸ்ட் இண்டீஸ்.. பூரான், போவேல் அபாரம்.. இந்தியாவுக்கு செம சவால்

டிரிண்டாட் : சர்வதேச கிரிககெட்டில் வருகிறவன், போறவன் எல்லாம் அடிக்கும் அளவுக்கு அம்பி போல் வெஸ்ட் இண்டீஸ் அணி மாறிய நிலையில், தற்போது இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நல்ல சவாலை கொடுத்திருக்கிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டி20 போட்டி பிரைன் லாரா கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் முகேஷ் குமார், திலக் வர்மா ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

West indies set 150 runs as target for India in 1st t20

தொடக்க வீரர் பிராண்டன் கிங் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரிகளை அடிக்க, கைல் மெயர்ஸ, 7 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன்னில் சாஹ்ல் பந்தில் வெளியேறினார். அதே ஓவரில் பிராண்டன் கிங்கும் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய நிக்கோலஸ் பூரான் சிக்சர்கள் விளாசி, தன்னுடைய வருகையை பறைசாற்றினார்.

சார்லஸ் 3 ரன்களில் வெளியேற, நிக்கோலஸ் பூரான், போவேல் ஜோடி இணைந்து அதிரடியாக விளையாடியது. இதனால், உடம்பை இரும்பா ஆக்கிகனும் என இந்திய ரசிகர்கள் நிலைத்த நிலையில், இந்திய வீரர்களை பயம் காட்டிய நிக்கோலஸ் பூரான் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தாத புயல் போல் கடந்து சென்றுவிட்டது.

பூரான் 34 பந்தில் 41 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, இந்திய அணி வீரர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். ஆனால், அதற்குள் ரோமன் பொவேல் கொடுத்த கேட்சை சாஹல் தவறவிட, இந்தியாவுக்கு மீண்டும் சனி பின் தொடர்ந்தது. பொவேல் 3 சிக்சர், 3 பவுண்டரிகள் எடுக்க 32 பந்தில் 48 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.

இதே போன்று ஷிம்ரன் ஹேட்மயரும் பெரிய அளவில் சோபிக்காமல், 10 ரன்களில் வெளியேறி, இந்திய வீரர்கள் வயிற்றில் பாலை வாய்த்தார். ஆடுகளம் கொஞ்சமாக தோய்வாக மாற, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கொஞ்சம் தடுமாறினாலும், நீங்க கவலைப்படாதீங்க ராசா நாங்க பார்த்துக்கிறோம் என ஓயிடு பந்துகளை முகேஷ் குமார் அள்ளி தெளிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

100 ரன்களுக்குள் சுருண்டு விடும் என ரசிகர்கள் போட்டி தொடங்குவதற்கு முன் நினைத்த நிலையில், சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்தது. கடைசி 5 ஓவரில் 42 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்க்ள் சிலர் சிறப்பாக கேட்ச் பிடித்ததும் பாராட்டத்தக்கது.

Story first published: Thursday, August 3, 2023, 21:54 [IST]
Other articles published on Aug 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+