Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"தீபாவளி" வந்தாச்சு.. WI vs AUS முதல் டி20 - நாளை (ஜுலை.10) அதிகாலை "சுடச்சுட" மேட்ச் தயார்

செயின்ட் லூசியா: மற்றொரு அட்டகாசமான தொடர் இதோ தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன.

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஆரோன் ஃபின்ச் செயல்பட, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக கைரன் பொல்லார்ட் வழிநடத்துகிறார்.

 பெரிய சிக்கல்

பெரிய சிக்கல்

உலக டி20 சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, டுவென்டி 20 கிரிக்கெட்டில் எளிதில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகின்றனர். உலகின் அந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தாலும், அங்கு டி20ல் இவர்கள் தான் ராஜா. முதலில் களமிறங்கும் பேட்ஸ்மேன், 10வதாக களமிறங்கும் பவுலர்கள் வரை சிக்ஸர்கள் வல்லமை உடையவர்களாக இருக்கின்றனர். அது தான் எதிரணிகளுக்கு பெரிய சிக்கலாக உள்ளது.

 பெரிதும் எதிர்பார்ப்பு

பெரிதும் எதிர்பார்ப்பு

இந்நிலையில், ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 2 - 3 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்திருக்கும் வெ.இ., அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. எனவே, ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

 போட்டி நடைபெறும் இடம்

போட்டி நடைபெறும் இடம்

1 வது டி 20, ஜூலை 10, 5 AM IST, டேரன் சமி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், Gros Islet, செயின்ட் லூசியா

2 வது டி 20, ஜூலை 11, 5 AM IST டேரன் சாமி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், Gros Islet, செயின்ட் லூசியா

3 வது டி 20, ஜூலை 13, 5 AM IST, டேரன் சாமி தேசிய கிரிக்கெட் மைதானம், Gros Islet, செயின்ட் லூசியா

4 வது டி 20, ஜூலை 15, 5 AM IST, டேரன் சமி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், Gros Islet, செயின்ட் லூசியா

5 வது டி 20, ஜூலை 17, 5 AM IST, டேரன் சமி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், Gros Islet, செயின்ட் லூசியா

1 வது ஒருநாள், ஜூலை 20 (இரவு), 12 AM IST, கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ்

2 வது ஒருநாள், ஜூலை 22 (இரவு), 12 AM IST, கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ்

3 வது ஒருநாள், ஜூலை 24 (இரவு), 12 AM IST, கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ்

 இரு அணி வீரர்கள்

இரு அணி வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ்: எவின் லூயிஸ், லென்ட்ல் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மயர், கைரன் பொல்லார்ட் (c), நிக்கோலஸ் பூரன் (w), ஆண்ட்ரே ரஸ்ஸல், டுவைன் பிராவோ, அகீல் ஹொசைன், ஓபெட் மெக்காய், பிடல் எட்வர்ட்ஸ், ஆண்ட்ரே பிளெட்சர், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ், ஹேடன் வால்ஷ், கெவின் சின்க்ளேர்

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (c), மத்தேயு வேட் (w), மிட்செல் மார்ஷ், மாய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆஷ்டன் டர்னர், ஜோஷ் பிலிப், டேனியல் கிறிஸ்டியன், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், ரிலே மெரிடித், பென் மெக்டெர்மொட், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், அலெக்ஸ் கேரி, ஆண்ட்ரூ டை, மிட்செல் ஸ்வெப்சன், வெஸ் அகர்

Story first published: Friday, July 9, 2021, 19:15 [IST]
Other articles published on Jul 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+