For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிளேயிங் லெவனிலிருந்து ஜடேஜா அதிரடி நீக்கம்.. காரணம் என்ன? ரோகித்தை மடக்க வெஸ்ட் இண்டீஸ் செம பிளான்

செயிண்ட் கிட்ஸ் : செயிண்ட் கிட்ஸ்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஒன்றரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

Recommended Video

Asia Cup 2022 தொடரின் முழு அட்டவணை வெளியானது *Cricket

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் , இந்த போட்டி பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்து வீசுவதாக தெரிவித்தார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இது குறித்து பேசிய அவர் ஆடுகளத்தை வைத்து நாங்கள் பந்து வீசும் முடிவை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார். முதலில் பந்து வீசி பிறகு செஷிங் செய்ய நினைத்தோம், அதற்காகத்தான் தற்போது பந்து வீச்சு தேர்வு செய்துள்ளதாக ரோகித் சர்மா குறிப்பிட்டார். பவர்பிளவில் அதிக ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துள்ளதாக ரோகித் சர்மா கூறினார்.

திணறுவது ஏன்?

திணறுவது ஏன்?

மைதானம் சிறிய அளவில் இருந்தாலும் இங்கு சராசரி ஸ்கோர் பெரிய அளவில் இல்லை என்பதை வீரர்கள் உணர வேண்டும் என்றும் ரோகித் சர்மா கூறினார். வீரர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டாலும் அது ரிஸ்க் எடுத்து பெரிய ஷார்ட் ஆடி தான் ரன் எடுக்க வேண்டியது இருப்பதாக ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார் . தொடர்ந்து இடதுக்கை வேகப்பந்து வீச்சாளரிடம் ஆட்டம் இழப்பது குறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

ஜடேஜா இல்லை

ஜடேஜா இல்லை

அதற்கு பதில் அளித்த ரோகித் தமக்கு அது எந்த கவலையும் இல்லை என்றும் பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அவர்களை நாம் எதிர்கொண்டு ரன் அடிக்க தான் வேண்டும் என்றும் குறிப்பிட்டார் .இன்றைய ஆட்டத்தில் நட்சத்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு தீபக் ஹூடா இடம் பெற்றுள்ளதாக ரோகித் சர்மா கூறினார். வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை ஓடியன் ஸ்மித்துக்கு பதிலாக ஆல்ரவுண்டர் டோமினிக் டிராக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

செம பிளான்

செம பிளான்

ஆடுகளம் இரண்டாவது இன்னிங்ஸில் தோய்வாக இருப்பதாக குறிப்பிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பூரான் முதலில் பேட் செய்து அதிக ரன்கள் அடித்து வெற்றி பெற முயற்சிப்போம் என்றும் அவர் கூறினார். இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை இந்தியா சமாளிக்க தினறுவதை உணர்ந்த அவர் தற்போது இரண்டு இடதுகை வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 2, 2022, 21:44 [IST]
Other articles published on Aug 2, 2022
English summary
West indies vs India 3ef t20 – Jadeja is not playing in todays game பிளேயிங் லெவனிலிருந்து ஜடேஜா அதிரடி நீக்கம்.. காரணம் என்ன? வெஸ்ட் இண்டீஸ் சவாலை சமாளிப்பாரா ரோகித்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+