Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்.. விராட் கோலி அதிரடி நீக்கம்.. அஸ்வினுக்கு வாய்ப்பு

மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வரும் 29ஆம் தேதி முதல் பங்கேற்கிறது.

Recommended Video

West Indies T20 தொடருக்கான India அணி அறிவிப்பு IND vs WI *Cricket

இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது .

இதில் விராட் கோலியின் பெயர் இடம் பெறாதது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அஸ்வினுக்கு வாய்ப்பு

அஸ்வினுக்கு வாய்ப்பு

காயம் காரணமாக இரண்டு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத கே. எல். ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.எனினும் அவர்கள் காயம் முழுமையாக குணமடைந்தால்தான் வெஸ்ட் இண்டீஸுக்கு செல்வார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது .இந்தத் தொடரில் 8 மாதங்களுக்குப் பிறகு டி20 போட்டியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு தேர்வு குழுவினர் வாய்ப்பளித்துள்ளனர்.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

இதே போன்று நட்சத்திர வீரர்களான விராட் கோலி, சாஹல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு மட்டுமே வழங்கியுள்ளதாகவும் நீக்கவில்லை என்றும் தேர்வு குழு அறிவித்துள்ளது. ரோகித் சர்மா, இசான் கிஷன்,கே .எல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா ஸ்ரேயாஸ் அய்யர் , தினேஷ் கார்த்திக் ஆகியோர் நடு வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரிஷப் பண்ட் இம்முறை நடுவரிசையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல் , அஸ்வின் ஆகியோர் விளையாடுகின்றனர். ரவி பிஷ்ணாய்க்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. வேகப்பந்துவீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார், ஆவேஷ் கான் ஹர்ஷல்பட்டேல், ஆர்ஸ் தீப் சிங் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

அதிவேகமாக பந்து வீசி அனைவரையும் கவர்ந்த இம்ரான் மாலிக் மற்றும் அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் டி20 அணியிலிருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, இஷான் கிஷன், கே எல் ராகுல், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ,அக்சர் பட்டேல் , அஸ்வின், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்சல் பட்டேல், ஆர்ஸ்தீப் சிங்.

Story first published: Thursday, July 14, 2022, 15:56 [IST]
Other articles published on Jul 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+