Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீ காக் இருக்கும் போதே.. ரூ.16 கோடிக்கு நிக்கோலஸ் பூரண் வாங்கிய லக்னோ.. கம்பீர் திட்டம் என்ன?

கொச்சி: லக்னோ அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பரான டீ காக் இருக்கும் போது, மீண்டும் மற்றொரு விக்கெட் கீப்பரான நிக்கோலஸ் பூரண் ரூ.16 கோடி கொடுத்து வாங்கப்பட்டுள்ளார்.

16வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமானது கொச்சியில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இந்த மினி ஏலத்திற்கான இறுதிக் கட்ட வீரர்கள் பட்டியலில் 405 பேர் உள்ளனர்.

அதில் 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 87 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரூ.16 கோடிக்கு ஏலம் போன பூரண்

ரூ.16 கோடிக்கு ஏலம் போன பூரண்

இந்த நிலையில் ஏலம் தொடங்கியது முதலே சாம் கரணுக்கு ரூ. 18.50 கோடி, கேமரூன் கிரீனுக்கு ரூ.17.50 கோடி, பென் ஸ்டோக்ஸ்-க்கு ரூ.16.25 கோடி என முக்கிய அணிகளால் பெரிய தொகை கொடுக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரண் ரூ.16 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

போட்டிபோட்ட அணிகள்

போட்டிபோட்ட அணிகள்

அவரின் அடிப்படை விலையான ரூ.2 கோடியில் இருந்து கண் சிமிட்டும் நேரத்தில் ரூ.10 கோடிக்கு சென்றார். ஆனால் அவரை வாங்குவதில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் தீவிரமாக இருந்தன. இறுதியாக லக்னோ அணி ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. கடந்த ஆண்டு ரூ.10.75 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்ட நிக்கோலஸ் பூரண், ஃபார்மில் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டார்.

டீ காக் - பூரண்

டீ காக் - பூரண்

நிக்கோலஸ் பூரண் அதிரடியாக ஆடினாலும், சூழலுக்கு ஏற்ப விளையாட மாட்டார் என்ற எண்ணம் ரசிகர்களிடையே இருந்தது. இதனால் ரூ.5 கோடிக்கு மேல் ஏலத்தில் வாங்கப்பட மாட்டார் என்று எண்ணியிருந்த நிலையில், ரூ.16 கோடிக்கு ஏலம் சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் லக்னோ அணியில் ஏற்கனவே டீ காக் என்ற அற்புதமான விக்கெட் கீப்பர் விளையாடி வரும் நிலையில், இன்னொரு விக்கெட் கீப்பராக நிக்கோலஸ் பூரண் வாங்கப்பட்டுள்ளார்.

மிடில் ஆர்டர் ஹிட்டர்

மிடில் ஆர்டர் ஹிட்டர்

இருப்பினும் மிடில் ஆர்டரில் ஸ்டாய்னிஸ் மட்டுமே அதிரடி வீரர் என்பதால், கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடும் முக்கிய வீரராக நிக்கோலஸ் பூரண் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஆனாலும் நட்சத்திர வீரர்கள் அதிமுள்ள லக்னோ அணியில், நிக்கோலஸ் பூரணை பயிற்சியாளர் கம்பீர் எப்படி பயன்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Friday, December 23, 2022, 17:37 [IST]
Other articles published on Dec 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+