For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அணியைக் காக்க "ஓட" வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட கேப்டன்கள் டோணி - ஹோல்டர்!!

பெர்த்: இன்றைய இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் மோதலில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையைப் பார்க்க முடிந்தது இரு அணிகளிலுமே கேப்டன்கள்தான் கடைசி வரை ரன்னுக்காக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் முன்னணி வீரர்கள் எல்லாம் மட மடவென சரிந்த நிலையில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தலையில் ரன் குவிக்கும் பொறுப்பு வந்து விழுந்தது.

What a match!

அவரும் தனது வயதுக்கும், அனுபவத்துக்கும் மீறிய வகையில், மிகச் சிறப்பாக, பொறுப்பாக நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை கெளவரமான இடத்திற்குக் கொண்டு சென்றார். கடைசி வரை போராடிய அவர் 57 ரன்களை எடுத்து கெளரவமான இலக்கை அணி எட்ட உதவினார்.

அதே போல இந்தியாவின் சேஸிங்கின்போதும் அணியின் வெற்றி கேப்டன் டோணி தலையில் வந்து விழுந்தது. முன்னணி வீரர்கள் எதிர்பாராத வகையில் அவுட்டாகிச் செல்லவே கேப்டன் டோணிக்கு நெருக்கடி முற்றியது. வழக்கம் போல கூலாக ஆடிய டோணி, கிடைத்த எந்த வாய்ப்பையும் விடாமல் ரன்னாக்கினார்.

ஓடினார் ஓடினார் ஒவ்வொரு ரன்னுக்காகவும் விடாமல் ஓடினார். அவருக்கு அஸ்வினும் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கவே கடைசி வரை விடாமல் போராடி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார் கேப்டன் டோணி.

இரு அணிகளுக்கும் இன்று கேப்டன்கள்தான் ஏதோ ஒரு வகையில் வாழ்வளித்தனர் என்பது ஆச்சரியமான ஒரு ஒற்றுமை. ஆனால் கடைசியில் வென்றவர் நம்ம கேப்டன்தான் என்பதில் நமக்கு ஒரு பெருமை.

பட், இந்த போட்டியிலிருந்து இ்ந்தியா பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக் கொள்வார்கள் என நம்புவோம்.

Story first published: Friday, March 6, 2015, 19:33 [IST]
Other articles published on Mar 6, 2015
English summary
In today's match at the WC, both the captains of India and WI fought for their pride in their respective batting.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+