Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2024 டி20 உலகக்கோப்பை செமி ஃபைனல் போகும் 4 அணிகள் எவை? வெளியான வெற்றி சதவீதம்

நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த நிலையில் எந்த அணி உலகக் கோப்பையை வெல்லும் என்ற வெற்றி சதவீத பட்டியல் வெளியாகி இருக்கிறது.

தற்போது உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்களின் செயல்பாடுகள், அந்த அணியின் முந்தைய செயல்பாடுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கணினியின் மூலம் இந்த வெற்றி வாய்ப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

What are the chances of winning T20 World Cup 2024 by India Australia and England


இந்த பட்டியலை வைத்து எந்த நான்கு அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என நாம் கணிக்கலாம். 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றி வாய்ப்பு கொண்டுள்ள அணியாக இங்கிலாந்து அணி உள்ளது. 2022 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியே மீண்டும் 2024 டி20 உலக கோப்பையையும் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக கணிக்கப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு 80 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. இந்த இரண்டு அணிகளுக்கும் உலகக் கோப்பையை வெல்ல 70 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளது. அடுத்து நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணி 65 சதவீத வெற்றி வாய்ப்புடனும், ஐந்தாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் 60 சதவீத வெற்றி வாய்ப்புடனும் உள்ளன.

தென்னாப்பிரிக்காவிற்கு 50 சதவீத வெற்றி வாய்ப்பும், பாகிஸ்தான் அணிக்கு 35 சதவீத வெற்றி வாய்ப்பும் உள்ளதாக இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் அரை இறுதிக்குச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக நாம் கருதலாம். நான்காவது அணியாக அரை இறுதிக்கு முன்னேற நியூசிலாந்து அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

2024 டி20 உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும்? என்ற வெற்றி சதவீத பட்டியல் :

இங்கிலாந்து (80%)
இந்தியா (70%)
ஆஸ்திரேலியா (70%)
நியூசிலாந்து (65%)
வெஸ்ட் இண்டீஸ் (60%)
தென்னாப்பிரிக்கா (50%)
பாகிஸ்தான் (35%)
இலங்கை (18%)
ஆப்கானிஸ்தான் (15%)
வங்கதேசம் (5%)


Story first published: Wednesday, May 29, 2024, 22:40 [IST]
Other articles published on May 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+