Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெ.ஆ., டெஸ்ட் தொடர் தோல்வி பற்றி டோணி சொன்னது என்ன தெரியுமா?

சென்னை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரை இந்தியா இழந்தது குறித்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், சைலண்டாக, தற்போதைய கேப்டன் விராட் கோஹ்லிக்கு சேதி சொல்லியுள்ளார் மகேந்திர சிங் "கூல்" டோணி.

கேப்டனாக அதிக டெஸ்ட் வெற்றி என்ற பெருமை, கேப்டன் கூல், மகேந்திர சிங் டோணிக்கு உள்ளது. அவர், 60 போட்டிகளில், 27 வெற்றிகளைப் பெற்றுள்ளார். சவுரவ் கங்குலி கேப்டனாக 49 போட்டிகளில், 21 வெற்றிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோஹ்லி 34 போட்டிகளில், 20ல் வென்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அந்த சாதனையை கோஹ்லி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நடந்துள்ள இரண்டு ஆட்டங்களிலும் வென்று தொடரை தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது.

டோணியிடம் கேள்வி

டோணியிடம் கேள்வி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டியில் விளையாட உள்ள, முன்னாள் கேப்டனான டோணி, சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது, தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தோல்வி குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அனைத்து விக்கெட்களும் முக்கியம்

அனைத்து விக்கெட்களும் முக்கியம்

"இந்தத் தொடரில் இதுவரை நடந்துள்ள இரண்டு டெஸ்ட்களிலும், தென்னாப்பிரிக்காவின் 20 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளோம். எதிரணியின் அனைத்து விக்கெட்களை வீழ்த்தினால்தான் போட்டியில் வெற்றி பெற முடியும். அந்த வகையில், இந்தப் போட்டிகளை நான் பார்க்கிறேன்."என்று தல டோணி கூறினார்.

பேட்டிங்கும் முக்கியமாச்சே

பேட்டிங்கும் முக்கியமாச்சே

டோணியின் கருத்துபடி, பவுலர்கள் தங்களுடைய பங்கை சிறப்பாக செய்து, எதிரணியின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க வேண்டியது பேட்ஸ்மேன்களின் பொறுப்பு.

கோஹ்லிக்கு மறைமுக அறிவுரை

கோஹ்லிக்கு மறைமுக அறிவுரை

இதை நேரடியாக சொல்லாமல், தற்போதைய கேப்டன் விராட் கோஹ்லிக்கு சேதி சொல்லியுள்ளார் டோணி. டோணியின் வார்த்தைகளை சரியாக கவனித்தால், ஒயிட்வாஷ் தோல்வியில் இருந்து இந்திய அணி தப்பிக்கும். செய்வாரா கோஹ்லி?

Story first published: Saturday, January 20, 2018, 16:19 [IST]
Other articles published on Jan 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+