Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நூலிழையில் இருக்கும் அரையிறுதி வாய்ப்பு” அடித்துக்கொள்ளும் 3 அணி.. இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் உள்ளதா

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி நுழைய வாய்ப்பு உள்ளதா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்.17ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் தற்போது வரை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் அசுர பலத்துடன் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளன

ரசிகர்களுக்கு குழப்பம்

ரசிகர்களுக்கு குழப்பம்

மொத்தமுள்ள 12 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சூப்பர் 12 லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அரையிறுதிக்கு தகுதிப்பெறும். அந்தவகையில் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இதே போல குரூப் பி பிரிவில் பாகிஸ்தான் 3 வெற்றிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இதில் 2வது இடத்தை யார் பிடிப்பார்கள் என்ற குழப்பம் தான் நீடித்து வருகிறது.

நியூசி, வாய்ப்பு

நியூசி, வாய்ப்பு

நியூசிலாந்து அணி இதுவரை ஆடியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி கண்டு 2 புள்ளிகளை பெற்றுள்ளது. குறிப்பாக இந்திய அணியை 14.3 ஓவர்களில் வீழ்த்தியதால் ரன் ரேட்டை 0.765 என மிகவும் பலமாக வைத்துள்ளது. அடுத்துள்ள 3 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டால், சுலபமாக அரையிறுதிக்கு சென்றுவிடும். ஒருவேளை ஒன்றில் தோல்வியடைந்தால் கூட ரன் ரேட் கணக்கிடப்பட வேண்டிய சூழல் உருவாகும்.

கடினமான போட்டி

கடினமான போட்டி

ஆனால் அடுத்த 3 ஆட்டமும் அவ்வளவு எளிதல்ல. அடுத்த 3 போட்டிகள் ஆஃப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. இதில் ஆஃப்கானிஸ்தான் சவால் கொடுக்கும். இந்த 3 போட்டியும் ஒரு நாள் இடைவெளிவிட்டு தொடர்ச்சியாக நடைபெறுகிறது. மேலும் வேறு வேறு மைதானங்களில் நடைபெறுவதால் சிக்கல் இருக்கும்.

Recommended Video

Retention செய்ய வேண்டாம் என்ற Dhoni.. Srinivasan சொன்ன தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி
 எழுச்சி கண்ட ஆஃப்கான்

எழுச்சி கண்ட ஆஃப்கான்

ஆஃப்கானிஸ்தான் அணி தற்போதுவரை 3 போட்டிகளில் ஆடி 2 வெற்றிகளுடன் உள்ளது. இஹன் ரன் ரேட் 3.097 என மிக அதிகமாக உள்ளது. இந்த அணி அடுத்துள்ள 2 போட்டிகளையும் வென்றால் அரையிறுதிக்கு செல்லலாம். ஆனால் அடுத்த 2 போட்டியும் இந்தியா, நியூசிலாந்துடன் என்பதால் மிக கடினமாக இருக்கும். ஒருவேளை இந்தியாவுடன் தோற்று, நியூசிலாந்திடம் வெற்றி கண்டால் ரன் ரேட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இந்தியாவின் வாய்ப்பு

இந்தியாவின் வாய்ப்பு

இந்திய அணியின் நிலைமை தான் தற்போது பெரிய சிக்கலில் உள்ளது. இந்திய அணிக்கு அடுத்ததாக ஆஃப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து அணிகளுடன் போட்டியுள்ளது. இந்த மூன்றிலும் வெற்றி பெற்றால் கூட அரையிறுதி வாய்ப்பு கடினம் தான். நியூசிலாந்து அணி ஆஃப்கானிஸ்தானிடம் தோற்க வேண்டும். அதன்பின்னர் ரன் ரேட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதிலும் இந்திய அணியின் ரன் ரேட் மிக குறைவாக உள்ளது. அடுத்த 3 போட்டிகளில் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற்று தீர வேண்டும்.

Story first published: Tuesday, November 2, 2021, 20:12 [IST]
Other articles published on Nov 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+