கோஹ்லியின் ஆர்.சி.பி. கிங்ஃபிஷர் ஏர்லைன் மாதிரி: எப்படி தெரியுமா?
சென்னை: ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பற்றி ட்விட்டரில் என்ன பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா?
ஐபிஎல் 9வது சீசனின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.
ஸ்டேடியத்தில் இருந்தவர்கள் எல்லாம் கோஹ்லி, ஆர்.சி.பி. என்று கோஷமிட்டபோதிலும் ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
கிங்ஃபிஷர்
ஆர்.சி.பி. கிங்ஃபிஷர் ஏர்லைன் போன்று. அனைவருக்கும் அதை பிடிக்கும், பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் இறுதியில் அடங்கிவிடும். #RCBvSRH
கோஹ்லி
இன்று கோஹ்லி அமைதிக்கான நோபல் பரிசு, உலக அழகிப் பட்டம், ஆசியா-பசிபிக் அழகிப் பட்டம், மான் புக்கர் பரிசு, ஜெட் ப்ரிவிலிஜ் கோல்டு கார்டு ஆகியவற்றை வென்றுள்ளார் என நினைக்கிறேன். ஆனால் ஐபிஎல் மட்டும் இல்லை.
பிரியாணி
பீர் இல்ல சார் பிரியாணி தான் பெஸ்ட் என நேற்றைய ஆட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிங்
நேற்றைய போட்டியை அழகான படம் போட்டு விளக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications