
பெரிய அவமானம்
இந்த அவமானத்திற்கு ரோகித் படை பதிலடி கொடுக்குமா என்பதை தற்போது பார்க்கலாம். கடைசியாக இந்திய அணி வங்கதேசத்துக்கு 2015 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இந்தியா விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் மூன்று ஒரு நாள் போட்டி தான் இந்தியாவுக்கு பெரிய அவமானத்தை கொடுத்தது.

அபார பந்துவீச்சு
குறிப்பாக தோனியின் சரிவு அந்தத் தொடர்களில் தான் தொடங்கியது. வங்கதேச அணி அந்த காலகட்டத்தில் பல இளம் வீரர்களை கண்டெடுத்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகப்படுத்தினர். குறிப்பாக முஸ்தபிசுர் ரஹிம் போன்ற பந்துவீச்சாளர்கள் அந்தத் தொடரில் தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார்கள். வங்கதேச வேகப்பந்து பேச்சாளர்கள் அந்த தொடரில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தினார்கள்.

பதிலடி கொடுக்குமா
இதனால் இந்திய அணி கடுமையாக தடுமாறியது.சௌமியா சர்க்கார் போன்ற பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடி இந்தியாவின் பந்து வீச்சுக்கு நெருக்கடி கொடுத்தனர்.இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி வங்கதேசத்திடம் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து இதற்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது.

தடுமாற்றம்
அந்த தொடரில் தோனியை தரம் தாழ்ந்து வங்கதேச ரசிகர்கள் விமர்சித்தது இன்னும் சில ரசிகர்களால் மறக்க முடியாதது. நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் வங்கதேசத்திடம் இந்தியா வெற்றி பெற்றாலும் பந்து வீசும் போது முதலில் தடுமாறியது. இம்முறை வங்கதேச ரசிகர்கள் எப்போதும் போல் அடாவடியாக தான் மைதானத்தில் இருப்பார்கள். அவர்களை அமைதி படுத்த வேண்டும் என்றால் ரோகித் படை தங்களுடைய பேட்டிங்கால் தான் பதில் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications











