Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை தோற்கிற மாதிரி இருக்கே.. இப்போ மழை வந்து காப்பாற்றுமா? வானிலை நிபுணர்களின் லேட்டஸ்ட் கணிப்பு

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் குஜராத் தனி அபாரமாக விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய சிஎஸ்கே அணி பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டது.

எனினும் குஜராத் அணி வீரர்கள் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி ரங்களை சேர்த்து வருகிறார்கள். இதனால் தோனி டாஸ் விஷயத்தில் தவறு செய்து விட்டாரா என ரசிகர்களும் யோசித்து வருகிறார்கள்.

What happen if rain pours now as gujarat in strong position vs csk

இந்த நிலையில் சுப்மன் கில் 39 ரன்களுக்கு ஆட்டம் இழக்க சாஹா மற்றும் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்திருக்கிறார்கள். இதனால் குஜராத் அணி 200 ரன்களுக்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை வந்தாவது சிஎஸ்கே வை காப்பாற்றுமா? என ரசிகர்கள் யோசிக்க வைத்து விட்டார்கள்.

இந்த நிலையில் தற்போது லேசான தூரல் பெய்து வருகிறது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் சரியாக பந்து வீச முடியாமல் தடுமாறி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் யாருக்கு சாதகம் என்று பார்க்கலாம். சிஎஸ்கே அணியில் ஜடேஜா சிறப்பாக பந்து வீசிய நிலையில் மழை பெய்தால் ஆடுகளம் ஈரமாக மாறிவிடும்.

இதன் காரணமாக பந்துகளை ரஷீத் கான் மற்றும் நூர் ஹமத் சரியாக வீச முடியாது. இது சிஎஸ்கே அணிக்கு சாதகமான சூழலாகும். அதே வேளையில் பேட்டிற்கு பந்து சரியாகவும் வராது. இதனால் பெரிய ஷாரட் அடிக்க சிஎஸ்கே வீரர்கள் கடுமையாக போராட வேண்டியதிருக்கும். இதனால் இரண்டு அணிகளுக்குமே சாதகங்கள் பாதகங்கள் இருக்கிறது.

Story first published: Monday, May 29, 2023, 21:08 [IST]
Other articles published on May 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+