சென்னையில் கடைசியாக ஆஸி. விளையாடிய போது நடந்தது என்ன? சேப்பாக்கம் மைதானம் சந்தித்த சோதனை
சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்தியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் மைதானமாக எம்.ஏ, சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் இருந்து வருகிறது.
ஆனால் 2011ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெறும் 4 சர்வதேச ஒருநாள் போட்டிகள் தான் நடைபெற்றுள்ளது. இதன் காரணம், சேப்பாக்கம் சந்தித்த பல சோதனைகள் தான்.
சேப்பாக்கம் மைதானம் புதியதாக மாற்றி 2011ஆம் ஆண்ட உலக கோப்பைக்காக மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது ஐ, ஜே.கே, ஆகிய மூன்று பார்வையாளர்கள் மாடத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி, அதனை பயன்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர்.

சோதனை காலம்
மேலும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் அமைந்துள்ள கட்டடம் புராதன சின்னம் என்பதால், அதனை மாற்றி அமைக்க, அப்போதைய அதிமுக அரசு அனுமதி தரவில்லை. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அளவு 40 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் என்ற அளவு சுருக்கப்பபட்டது. இதன் காரணமாக சென்னையில் நிறைய போட்டி நடைபெறாமல் போனது.

பாகிஸ்தான் போட்டி
முக்கியமாக 2016ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலககோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்ற போது, சென்னை புறக்கணிக்கப்பட்டது. இந்த நிலையில், 2011ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு சென்னையில் 2012ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 227 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பாகிஸ்தான் அணி 48.1வது ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா போட்டி
இதனையடுத்து 2015ஆம் ஆண்டு இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் ஒருநாள் போட்டியில் மோதியது. இதில் இந்திய அணி 299 ரன்கள் எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி 264 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது. இதில் விராட் கோலி 138 ரன்களை விளாசினார்.இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா போட்டி
இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அப்போது 164 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது ஆஸ்திரேலிய அணி 137 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இதே போன்று கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 2019ஆம் ஆண்டு இந்தியாவுடன் விளையாடியது. இதில் இந்தியா 287 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அதனை 2 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது. இதில் இந்திய வீரர்களின் பந்துவீச்சு சுத்தமாக ஏடுப்படவில்லை.


Click it and Unblock the Notifications