Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா-ஆஸி. போட்டி மழையால் கைவிடப்பட்டால் செமி பைனலுக்கு எந்த அணி செல்லும்?

மொகாலி: நாளைய இந்தியா-ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டால் எந்த அணி, அரையிறுதிக்கு செல்லும் என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

உலக கோப்பை டி20 தொடரின், சூப்பர்-10, இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும். தோற்கும் அணி வெளியேற வேண்டிவரும். எனவே இப்போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

What happens if India-Australia World T20 'quarter-final' is washed out?

ஒருவேளை நாளை, போட்டி நடைபெறும் மொகாலியில் மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால், அப்போது இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். இதனால் இவ்விரு அணிகளின் மொத்த புள்ளியும் 5-ஆக மாறும்.

அந்த சூழ்நிலையில், தலா 5 புள்ளிகளுடன் இருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியாவில் எந்த அணி நிகர ரன் விகிதத்தில் கூடுதலாக உள்ளது என்று பார்க்கப்பட்டு, அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும்.

தற்போதுள்ள நிலையில் இந்திய அணியின் நிகர ரன் ரேட் -0.546 என்ற அளவிலும், ஆஸ்திரேலியாவின் நிகர ரன் ரேட் +0.440 என்ற அளவிலும் உள்ளது. எனவே மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால், ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் நுழைந்துவிடும்.

மொகாலியில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை இலாகா அறிவித்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாகும்.

Story first published: Saturday, March 26, 2016, 15:38 [IST]
Other articles published on Mar 26, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+