Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs பாக்.ஆட்டம் மழையால் ரத்தானால் என்னவாகும்? இயற்கையால் நெருக்டியை சந்திக்கும் ரோகித், பாபர்

மெல்போர்ன் : டி20 உலககோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணி வரும் 23ஆம் தேதி மோத உள்ள லீக் ஆட்டம் மழையால் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.

மெல்போர்னில் அன்றைய தினம் மாலை நேரத்தில் மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டம் மழையால் ரத்தானால் என்ன வாகும் என்பதை தற்போது காணலாம்.

5 ஓவர் ஆட்டம்

5 ஓவர் ஆட்டம்

இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி வர்த்தக ரீதியாக ஐசிசிக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் என்பதால். இந்தப் போட்டியை எப்படியாவது நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குறைந்தபட்சம் இரு அணிகளும் தலா 5 ஓவர்களாவது பேட்டிங் செய்யும் வகையில் போட்டி நடத்த ஐசிசி முயற்சி செய்யும்.

புள்ளிகள்

புள்ளிகள்

ஒருவேளை, ஒரு அணி இன்னிங்கிஸ் முழுமையாக விளையாடி விட்டு, மற்றொரு அணி விளையாடும் போது மழை பெய்தால், அந்த அணி 6 ஓவருக்கு மேல் பிடித்துவிட்டால், டக்வொர்த் லுயிஸ் விதி பயன்படுத்தப்பட்டு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். இந்த நிலையில், முடிவு எட்டப்படாமல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்படும்.

நெருக்கடி

நெருக்கடி

அப்படி, ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டால், இந்தியா, பாகிஸ்தான் என இரு அணிகளுக்கும் நெருக்கடி அதிகரிக்கும். இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவை இந்தியா பாகிஸ்தான் அணிகள் வீழ்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும். தென்னாப்பிரிக்காவை வீழ்த்தும் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும்.

மழையால் ஆபத்து

மழையால் ஆபத்து

ஒருவேளை, தென்னாப்பிரிக்காவிடம் இந்தியாவும் தோற்று, பாகிஸ்தானும் தோற்றால், எஞ்சிய 3 போட்டிகிளில் இரு அணிகளும் பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் அணி தகுதிப் பெறும். இந்த நிலையில், ஒரு போட்டிக்கு மேல் மழையால் பாதிக்கப்பட்டால், அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு அவ்வளவு தான்.

Story first published: Friday, October 21, 2022, 12:07 [IST]
Other articles published on Oct 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+