Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரி...! செமி பைனல், பைனல் போட்டியில் மழை வந்தால்..? யாருக்கு கோப்பை..? ஐசிசியின் முடிவு என்ன?

லண்டன்:உலக கோப்பை கிரிக்கெட் புண்ணியத்தால், இங்கிலாந்தில் மழை என்பது தலைப்புச் செய்தியாகி உள்ள நிலையில் பைனல் அன்று மழை பெய்தால் என்ன நடக்கும் என்ற சுவாரசிய பேச்சுகள் எழுந்துள்ளன.

ஏக எதிர்பார்ப்புடன் உலக கோப்பை போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. ஆனால் இங்கிலாந்தில் தற்போது பெய்யும் மழை காரணமாக சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டியில் மழை வந்தால் ஐசிசியின் முடிவு எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும்? கோப்பை யாருக்கு? என்ற கேள்விகளை ரசிகர்களை எழுப்பி உள்ளனர்.

ரிசர்வ் டேயில் போட்டி

ரிசர்வ் டேயில் போட்டி

அவர்களுக்கு விடைசொல்லத்தான் இந்த பதிவு. சரி... அரையிறுதிப் போட்டியின் போது மழை பெய்தால் ரிசர்வ் டே என்று அழைக்கப்படும் மாற்று தினத்தில் போட்டியை நடத்த ஐசிசி அனுமதி தரும். அப்படியே போட்டியை மாற்றி வைத்தும் அன்று மழை பெய்தால் என்ன செய்வது?

இறுதிப்போட்டிக்கு தகுதி

இறுதிப்போட்டிக்கு தகுதி

அதற்கும் விடை இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் யார் கால் இறுதி சுற்று வரை முதலில் இருந்தாரோ அந்த அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெறும். இறுதி போட்டியில் மழை பெய்தால் மீண்டும் நடத்த ரிசர்வ் டே அளிக்கப்படும்.

பகிரப்படும்

பகிரப்படும்

அப்படி ரிசர்வ் தினத்திலும் இறுதி போட்டியின்போது மழை பெய்தால் உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். அது போன்ற சம்பவம், உலக கோப்பை தொடரில் இதுவரை நடந்ததே இல்லை.

கவலையில் ரசிகர்கள்

கவலையில் ரசிகர்கள்

ஆனால் இந்த முறை நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு என்பது ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பு. காரணம் பல முக்கிய போட்டிகள் இதுவரை மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதியில் நிறுத்தப் பட்டிருக்கின்றன. எனவே, அரையிறுதி மற்றும் இறுதி போட்டியை போன்று மழையை பற்றியும் ரசிகர்கள் ஆர்வமுடன் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Thursday, June 13, 2019, 13:03 [IST]
Other articles published on Jun 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+