For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4வது டெஸ்டில் இங்கிலாந்தை வெல்ல, இந்தியா என்ன செய்ய வேண்டும்?

சௌதாம்ப்டன் : இந்தியா, இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்து உள்ளன. நான்காவது போட்டி வரும் ஆகஸ்ட் 30 முதல் சௌதாம்ப்டன் நகரில் தொடங்க உள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் தோற்று, பின் மூன்றாம் டெஸ்ட் போட்டியை வென்று மீண்ட இந்தியா, தொடரில் 1-2 என பின்தங்கி உள்ளது.

இந்தியா அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும். ஒரு போட்டியில் தோற்றால் கூட தொடரை இங்கிலாந்து வெல்லும். இந்த நிலையில் நான்காவது டெஸ்டில் வெல்ல இந்தியா என்ன செய்ய வேண்டும்?

பந்துவீச்சை சமாளிக்க வேண்டும்

பந்துவீச்சை சமாளிக்க வேண்டும்

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது. முதல் டெஸ்டில் கூட 31 ரன் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தது, இரண்டாம் டெஸ்டில் இன்னிங்க்ஸ் தோல்வி அடைந்தது இந்தியா. அதில் கிடைத்த அடியில் இருந்து மீண்ட இந்தியா மூன்றாம் டெஸ்டில் நன்றாக விளையாடியது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடினார்கள். பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில், எந்த அணி பந்துவீச்சை சமாளித்து அதிக ரன் குவிக்கிறதோ அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

பார்ட்னர்ஷிப் ரொம்ப முக்கியம்

பார்ட்னர்ஷிப் ரொம்ப முக்கியம்

ஒருவரே ரன் குவிப்பது என்பது தோல்விக்கே வழி வகுக்கும். அதே சமயம், பேட்ஸ்மேன்கள் தங்கள் எடுக்கும் ரன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கூட்டணி அமைத்து ரன் குவிப்பதில் ஆர்வமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 50 ரன்களுக்கு மேல் கூட்டணியாக ரன் எடுத்துவிட்டால், அது மனதளவில் நம்பிக்கை அளிக்கும். அடுத்து வரும் பேட்ஸ்மேனுக்கும் அழுத்தம் இல்லாமல் ஆட உதவி செய்யும்.

கீப்பிங்கில் கவனம் தேவை

கீப்பிங்கில் கவனம் தேவை

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்ற பெயரோடு அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் தன் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளார். சென்ற போட்டியில், தன் முதல் டெஸ்ட் போட்டி என்றாலும் ஏழு கேட்ச் பிடித்து அசத்தினார். எனினும், இரண்டாம் இன்னிங்க்ஸில் ஜோஸ் பட்லர் கொடுத்த கேட்ச்சை விட்டுவிட்டார். அதை பயன்படுத்திய பட்லர் சதம் அடித்தார். சர்வேதேச போட்டிகளில் அதிக அனுபவம் இல்லாத ரிஷப், தான் முதலில் விக்கெட் கீப்பர், அப்புறம்தான் பேட்ஸ்மேன் என்பதில் உறுதியாக இருந்து கீப்பிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்லிப் கேட்ச்சில் கவனம் தேவை

ஸ்லிப் கேட்ச்சில் கவனம் தேவை

இந்த டெஸ்ட் தொடரில் ஸ்லிப் பீல்டிங்கில் இரண்டு அணிகளுமே பல முறை சொதப்பி விட்டது. எனவே, இந்தியா ஸ்லிப்பில் கவனமாக இருக்க வேண்டும். ஸ்லிப் பீல்டிங் அமைப்பில் வீரர்கள் நெருக்கமாக நிற்கிறார்கள் என்ற புகாரும் உள்ளது. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல்

முதல் கோணல் முற்றிலும் கோணல்

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய தோற்றது. அந்த போட்டிகளில் இந்தியாவின் துவக்க பேட்ஸ்மேன்கள் மிக சொற்ப ரன்களுக்கு அல்லது ரன்னே எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றது. அந்த போட்டியில், இந்திய துவக்க பேட்ஸ்மேன்கள் முதல் விக்கெட்டுக்கு ஐம்பதுக்கும் அதிகமாக ரன்கள் எடுத்தனர். இந்தியா பேட்டிங்கை துவங்கும் போது நிலையாக இருக்க வேண்டிய அவசியம் இதிலிருந்தே புரியும். அடுத்த வரும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் இல்லாமல் ஆட, துவக்க ரன்கள் தான் உறுதுணையாக இருக்கும்.

Story first published: Wednesday, August 29, 2018, 10:00 [IST]
Other articles published on Aug 29, 2018
English summary
What India should do to win the 4th test match? - an analysis
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+