Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச கிரிக்கெட்டை அச்சுறுத்தும் BAZBALL.. பேஷ்பால் என்றால் என்ன? டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர்

எட்ஜ்பாஸ்டன்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை அச்சுறுத்தும் ஒரு வார்த்தை தான் பேஷ்பால். ஆனால் இது கிரிக்கெட்டுக்கு அச்சுறுத்தல் கிடையாது.

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் நாடுகளுக்கு தான் இது உண்மையாகவே அச்சுறுத்தல். இந்தியா,இங்கிலாந்து மோதிய 5வது டெஸ்டில் பேஷ்பால் என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகிவிட்டது.

ஆனால், இன்னும் நமது ரசிகர்களுக்கு அந்த வார்த்தை பரீட்சியம் ஆகவில்லை. அது என்ன என்பது குறித்து தற்போது காணலாம்.

ஒருநாள் போட்டியின் மாற்றம்

ஒருநாள் போட்டியின் மாற்றம்

கடந்த 2 மாதங்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. தற்போது தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. அப்படி என்ன மாயம் நடந்தது என்று யோசித்தால், அங்கு நடந்த மேஜிக் பெயர் தான் பேஷ்பால். இங்கிலாந்து அணி 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் படுதோல்வியை தழுவியது.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

அதன் பிறகு, இங்கிலாந்து ஒருநாள் அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு, கேப்டன்கள் முதல் பயிற்சியாளர்கள் வரை மாற்றப்பட்டனர். அதன் பிறகு இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருநாள் போட்டியில் 481 ரன்கள், 498 ரன்கள் எல்லாம் குவித்தது. அவ்வளவு ஏன் 2019 உலகக் கோப்பையையும் வென்று அசத்தியது. தற்போது தொடர் தோல்விகளை தழுவிய டெஸ்ட் அணியிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன.

பேஷ் பால்

பேஷ் பால்

ஜோ ரூட் கேப்டனாக நீக்கப்பட்டு, ஸ்டோக்ஸ் அந்த பதவிக்கு வந்தார். கிறிஸ் சில்வர்வுட் பயிற்சியாளராக விலகிய நிலையில், அதிரடி நியூசிலாந்து வீரர் மெக்குல்லம் அந்த பதவிக்கு வந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இலக்கணத்தை உடைத்து அதிரடியாக ஆட வேண்டும் என்பதே Bazball ஆகும். பிரெண்டன் மெக்குல்லத்தை 'Baz என்று அழைப்பது வழக்கம். அவர் கொண்ட வந்த அதிரடி முறை என்பதால் Bazball என்று தற்போது ரசிகர்களால் அழைக்கப்படுகிறது.

பேஷ்பாலின் சாரம்சம்

பேஷ்பாலின் சாரம்சம்

Baseball விளையாட்டில் எப்படி பெரிய ஷாட்கள் ஆடுவார்களோ, அதே போல் கிரிக்கெட்டிலும் ஆட வேண்டும் என்பதே இதங்ன சாரம்சம். எந்த சூழிநிலையிலும் தோல்வியை ஓப்பு கொள்ள கூடாது.விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதிரடியாக ஆட வேண்டும் என்பதே மெக்குல்லமின் பேஷ்பால் விதி. இதை தான் தற்போது பின்பற்றும் இங்கிலாந்து, 387 ரன்கள் என்ற இலக்கை அதிரடியாக விளையாடி வெற்றி கண்டது.

Recommended Video

ICC Test Rankings வெளியீடு! இந்திய வீரர்கள் நிலை? *Cricket
அதிரடி செஸிங்

அதிரடி செஸிங்

இதற்கு முன்பு நடைபெற்ற நியூசிலாந்துக்கு முதல் டெஸ்டிலும் இங்கிலாந்து அணி 279 ரன்களை 78.5 வது ஓவரில் எட்டியது. 2வது டெஸ்டில் 299 ரன்களை 50 ஓவரில் எட்டி அசத்தியது. மூங்னறாவது டெஸ்டில் 296 ரன்களை 54.2வது ஓவரில் எட்டி வெற்றி பெற்றது. இந்த பேஷ்பால் கொள்கை அனைத்தும் செஸிங்கில் தான் தற்போது வரை வொர்க் அவுட் ஆகியுள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து காண்போம்.

Story first published: Wednesday, July 6, 2022, 23:18 [IST]
Other articles published on Jul 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+