Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டில் “பாக்சிங் டே” டெஸ்ட் என்றால் என்ன?? எப்படி வந்தது இந்த பாக்சிங் டே..!!

மெல்போர்ன்: பாக்சிங் டே.. கிரிக்கெட்டுக்கு மட்டும் அல்ல விளையாட்டு உலகில் ஒரு முக்கியமான நாள்..

நமது ஊரில் காணும் பொங்கல் எப்படியோ, அதே போல் தான் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு இந்த பாக்சிங் டே.

கிரிக்கெட்டுக்கும், பாக்சிங்கும் என்ன தொடர்பு, இந்த பெயர் எப்படி வந்தது என்பதை தற்போது காணலாம்..

பாக்சிங் டே

பாக்சிங் டே

கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் அதாவது டிசம்பர் 26ஆம் தேதி தான் பாக்சிங் டே என்று அழைக்கப்படும். அந்த நாளில் ஏதாவது பாக்சிங் போட்டி நடைபெறுமா என்று கேட்டால் அது தான் இல்லை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வழங்கப்படும் பரிசு பொருட்கள் ஒரு பாக்சில் தான் வரும் அல்லவா.. அந்த பரிசுப் பெட்டியை டிசம்பர் 26ஆம் தேதி தான் பிரித்து பார்ப்பார்கள்,

பரிசு பொருட்கள்

பரிசு பொருட்கள்

ஒரு சிலர், கிறிஸ்துமஸ் அன்றே பரிசுப் பெட்டிகளை பிரித்து பார்ப்பார்கள். அப்போது வீட்டில் சேரும் பெட்டியில் பொருட்களை வைத்து ஏழை மக்களுக்கோ, வீட்டில் பணிபுரிபவர்களுக்கோ மகிழ்ச்சியாக வழங்குவார்கள். இதனால் தான் கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் பாக்சிங் டே என்ற பெயர் வந்தது.

முக்கியமான நாள்

முக்கியமான நாள்

காணும் பொங்கல் போல் பாக்சிங் டே அன்று வீட்டில் இருக்காமல் எங்கேயாவது வெளியே குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கம். அதனால் தான் பாக்சிங் டே அன்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது. குறிப்பாக ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா நாடுகளில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி ஆண்டுதோறும் நடைபெறும்.

ஒரு லட்சம் பார்வையாளர்கள்

ஒரு லட்சம் பார்வையாளர்கள்

அன்று நடைபெறும் டெஸ்ட் போட்டியை காண வழக்கத்திற்கு மாறாக இரு மடங்கு கூட்டம் சேரும். ஆஷஸ் டெஸ்ட் போட்டி பாக்சிங் டே அன்று மெல்போர்னில் நடைபெற்றால், பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொடும். பாக்சிங் டே அன்று அதிக மக்கள் போட்டியை காண்பார்கள் என்பதால், அன்றைய தினம் விளையாட்டு உலகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

Recommended Video

India to play South Africa in empty stadium in Boxing Day Test | OneIndia Tamil
பொங்கல் டெஸ்ட்

பொங்கல் டெஸ்ட்

இந்த பாக்சிங் டே கலாச்சாரம் முதலில் இங்கிலாந்தில் தான் தோன்றியது. பின்னர் அவர்கள் ஆண்ட நாட்டில் எல்லாம், கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் பாக்சிங் டே சிறப்பாக கொண்டாடப்படும். இதே பாணியில் தமிழ்நாட்டில் பொங்கல் டெஸ்ட் என்று பொங்கல் வார விடுமுறையை குறிவைத்து கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. பின்னர் அட்டவணையை தயாரிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறி பொங்கல் டெஸ்ட் கைவிடப்பட்டது.

Story first published: Saturday, December 25, 2021, 18:54 [IST]
Other articles published on Dec 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+