For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

DEXA டெஸ்ட் என்றால் என்ன??.. இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட புதிய விதி.. இனி தப்பிக்கவே முடியாது!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் காயமடைந்து செல்லக்கூடிய வீரர்களுக்கு இனி அணிக்குள் திரும்ப வேண்டும் என்றால் யோ யோ டெஸ்ட் மட்டுமின்றி டெக்ஸா என புதிய தகுதி தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் சிக்கல் உண்டாகியுள்ளது.

பிசிசிஐ-ன் உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. இதில் தலைவர் ரோஜர் பின்னி, ஜெய் ஷா, ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு ஆலோசனை நடத்தினார்.

இதில் அடுத்து வரக்கூடிய 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் மற்றும் 2024ம் ஆண்டு வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்காக என்னனென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

புதிய விதிமுறை

புதிய விதிமுறை

அதன் முடிவில் தான் வீரர்களின் உடற்தகுதி பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வரப்பட்டது. அதாவது அணியில் தற்போது காயத்தால் பாதிப்படையும் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காயத்தினால் சில வீரர்கள் விலகியது தான் டி20 உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் என்றே கேப்டன் ரோகித் சர்மா குற்றம்சாட்டியிருந்தார். இதற்காக தான் யோ - யோ டெஸ்டுடன் சேர்த்து தற்போது DEXA டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

யோ யோ என்றால் என்ன

யோ யோ என்றால் என்ன

காயமடைந்த வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிக்க யோ - யோ தேர்வு நடத்தப்படும். இது அவர்களின் செயல்பாடுகளுக்காக வைக்கப்படுவதாகும். அதாவது 20 மீட்டர் கொண்ட நீளத்தை தேர்வு செய்து அதன் ஆரம்ப இடத்தினையும், முடிவு இடத்தினையும் ஒரு வீரர் மாறி மாறி தொட்டு வர வேண்டும். இதற்காக 40 விநாடிகள் தரப்படும். இந்த நேரத்திற்குள் எத்தனை முறை தொடுகிறார்கள் என்பதை வைத்து மதிப்பெண்கள் தரப்படும். தற்போது இதுமட்டுமே இந்திய அணியில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது டெக்ஸா என புதிய முறை வந்துள்ளது

dexa என்றால் என்ன?

dexa என்றால் என்ன?

டெக்ஸா என்பது எக்ஸ்ரே போன்றதாகும். Dexa (Dual-energy X-ray absorptiometry) என்பது வீரரின் உடலில் உள்ள எலும்புகளில் அடர்த்தி எந்த அளவிற்கு உள்ளது என்பதை சரிபார்க்கும். எலும்புகளுக்கு ஏற்ற உறுதியும் சக்திகளும் உள்ளனவா என்பதை ஸ்கேன் செய்து முடிவுகளை கொடுக்கும். மற்றொரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் எலும்பில் ஏதாவது ஒரு பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதையும் முன்கூட்டியே இந்த ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

பாதிப்பு இருக்காதா?

பாதிப்பு இருக்காதா?

எனவே ஒரு வீரருக்கு உடலின் உள்ளே உள்ள காயங்கள் முற்றிலுமாக சரியாகிவிட்டதா என இந்த பரிசோதனை கண்டறிந்துவிடும். இது சீனியர்கள் முஎம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுப்பது போன்றே தான் இந்த ஸ்கேனும் எடுக்கப்படும். ஆனால் இதன் முடிவுகள் வெறும் 10 நிமிடங்களுக்கு கிடைத்துவிடும் எனக்கூறப்படுகிறது. இதே போல இந்த பரிசோதனையை எந்தவித தயக்கமும் இன்றி அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம் என்றும், கதிர்வீச்சு அபாயம் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. தல் ஜூனியர்கள் வரை அனைவருக்குமே பொருந்தும். எலும்பில் உள்ள சத்துக்களின் அளவு சாதாரண மனிதர்களை விட விளையாட்டு வீரர்களுக்கு அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. எனவே அதற்கு ஏற்றார் போல தான் அளவீடுகள் வைக்கப்படும்.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்திய அணியில் சமீப காலமாக ஒரு வீரர் காயமடைந்து சென்றால், அவர் ஓரளவிற்கு குணமடைந்து யோ - யோ டெஸ்டில் தேர்ச்சி அடைந்தவுடன் அணியில் சேர்க்கப்பட்டுவிடுகின்றனர். ஆனால் காய பாதிப்பு உள்ளே சற்று இருப்பதால் அடுத்த சில போட்டிகளிலேயே மீண்டும் பெரிய காயத்துடன் சென்றுவிடுகின்றனர். உதாரணத்திற்கு ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா, தீபக் சஹார் போன்றோர் அப்படி தான் பாதிப்படைந்தனர்.

அளவீட்டு முறை

அளவீட்டு முறை

எனவே ஒரு வீரருக்கு உடலின் உள்ளே உள்ள காயங்கள் முற்றிலுமாக சரியாகிவிட்டதா என இந்த பரிசோதனை கண்டறிந்துவிடும். இது சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை அனைவருக்குமே பொருந்தும். எலும்பில் உள்ள சத்துக்களின் அளவு சாதாரண மனிதர்களை விட விளையாட்டு வீரர்களுக்கு அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. எனவே அதற்கு ஏற்றார் போல தான் அளவீடுகள் வைக்கப்படும்.

Story first published: Monday, January 2, 2023, 9:41 [IST]
Other articles published on Jan 2, 2023
English summary
What is Dexa Test ? BCCI brings Madatory test to the injured players in Team India, here is the reason why?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+