இந்திய அணியில் ஊக்கமருந்து பயன்பாடு.. 'Fake fitness Injection' என்றால் என்ன? ரகசியம் உடைத்த சேத்தன்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு வீரர்களும் ஊக்கமருந்தை பயன்படுத்தி வருவதாக தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்று இந்திய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் ஸ்டிங் ஆப்ரேஷன் ஒன்றை நடத்தியுள்ளது. அதாவது அவருக்கே தெரியாமல் ரகசிய கேமிரா வைத்து உண்மைகளை கண்டறிந்துள்ளனர்.
இந்த அப்ரேஷனில் இந்திய அணியில் நடக்கும் பல்வேறு சர்ச்சைகள், குழப்பங்கள் குறித்த உண்மை தகவல்களை சேத்தன் சர்மா உளறியிருக்கிறார். இதுகுறித்த வீடியோக்களும் தீயாய் பரவி வருகின்றன.

சேத்தன் சர்மா கருத்துக்கள்
விராட் கோலி - சவுரவ் கங்குலி இடையே நடந்த கவுரவப்பிரச்சினை, ரோகித் சர்மா - விராட் கோலி இடையே உள்ள ஈகோ மோதல், கேப்டன்சி சர்ச்சைகள் என பல தகவல்களை சேத்தன் சர்மா கூறியுள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் விட Fake Fitness Injections என அவர் பயன்படுத்தியுள்ள வார்த்தை தான் இந்திய கிரிக்கெட்டையே உலுக்கியுள்ளது. ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஊக்கமருந்து பயன்பாடு
விளையாட்டு துறையில் ஊக்கமருந்து பயன்பாடு என்பது மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் பல முன்னணி வீரர்கள் இதனை பயன்படுத்துவதாக சேத்தன் சர்மா கூறியிருக்கிறார். வீரர்கள் 80 - 85% உடற்தகுதியுடன் தான் இருப்பார்கள். ஆனால் முக்கியமான போட்டிகளில் விளையாடுவதற்காக ஊக்கமருந்தை எடுத்துக்கொண்டு போலியாக 100% ஃபிட்னஸ் என நிரூபித்துவிடுவார்கள். இது ஊக்க மருந்து சோதனையிலும் சிக்காது எனக்கூறியுள்ளார்.

என்ன நடக்கிறது?
அதாவது இந்திய வீரர்கள் அனைவருமே தங்களுக்கென்று தனித்தனியாக மருத்துவர்களை வைத்துள்ளனர். ஏதேனும் காயமடைந்துவிட்டால் அவர்களிடம் இருந்தும் ஆலோசனை பெற்று வருகிறார். எனவே உடற்தகுதி இல்லாத சமயங்களில் மருத்துவர்களிடம் ஊக்கமருந்தை கேட்கின்றனர். அவர்களும் ஊக்க மருந்து ஊசியை செலுத்துகின்றனர். ஆனால் இது ஊக்க மருந்து சோதனையில் சிக்காமல் இருக்கவும் ஒரு ஏற்பாட்டை செய்கிறார்கள்.

எப்படி?
உடல் வலிகளை குறைக்கும் வகையிலான மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால் ஊக்க மருந்து சோதனையின் போது சிக்கிவிடும். ஆனால் மருத்துவர்கள் போடும் ஊசியில் வலிக்கான மருந்தை சேர்க்காமல், உடல் சுறுசுறுப்பாக செயல்படும் வகையிலான மருந்தை மட்டும் செலுத்துகின்றனர். இதனால் எதுவுமே சோதனையில் சிக்காது என சேத்தன் சர்மா கூறியுள்ளார். இதுகுறித்து உண்மைகள் தெரிந்தும் பிசிசிஐ அமைதியாகதான் இருப்பது போலவும் அவர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications