பெங்களூரு : கிரிக்கெட் என்பது பல எளிமையான விதிகளை கொண்டு இருந்தாலும், சில விதிகளை புரிந்து கொள்வது சாதாரண மக்களுக்கு கடினமாக இருக்கும். அதில் ஒரு விதி தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபாலோ ஆன். ஃபாலோ ஆன் என்றால் என்ன? அது எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
முதலில் பேட்டிங் ஆடிய அணியை விட இரண்டாவது பேட்டிங் ஆடும் அணி தங்களது ஸ்கோரை 200 அல்லது 150 ரன்களுக்கு வித்தியாசத்தில் எடுக்கும் பட்சத்தில் ,.முதலில் பேட்டிங் ஆடிய அணிக்கு உரிமையுள்ளது பாலோ ஆன் கொடுக்க. அதாவது முதலில் பேட்டிங் செய்த அணி தங்கள் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடராமல் , எதிரணியை மறுபடியும் பேட்டிங் செய்ய கேட்டுக் கொள்ளலாம் .

அப்படி செய்தால், தேவைப்பட்டால் பாலோ ஆன் கொடுத்த அணி நான்காவதாக தங்கள் பேட்டிங்கை தொடரலாம்.டெஸ்ட் போட்டிகளில் ஆட்டம் ஐந்து நாட்களுக்கு மேல் இருந்தால் 200 ரன்கள் வித்தியாச அடிப்படையில் பலோ ஆன் கொடுக்கலாம். டெஸ்ட் மேட்ச் நான்கு நாட்கள் என்றால் 150 ரன்கள் வித்தியாசம் போதும்.இந்திய அணி 1971 ஆம் வருடம் மேற்கு இந்திய குழுவிற்கு சுற்றுப் பயணம் சென்றது, அஜித் வடேகர் தலைமையில். வெங்கட்ராகவன் துணை கேப்டனாக இருந்தார்.
முதல் டெஸ்ட் மேட்ச் கிங்ஸ்டனில் நடைப் பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி, தீலிப்ஸர் தேசாயின் 212 ரன்களால் மொத்தம் 387 ரன்களை குவித்தது. மேற்கு இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்தது. அந்த டெஸ்ட் மொத்த நாட்கள் நான்கு என்பதால், வெங்கட்ராகவன் போன்றோர் அஜித் வடேகரிடம் அந்த மேட்ச் சூழ்நிலைக்கு ஏற்ப இருந்த பாலோ ஆன் விதி முறையை சுட்டிக் காண்பித்து , விவாதித்து முடிவு எடுத்தனர்.
கேப்டன் அஜித் வடேகர் , மேற்கு இந்திய குழுவினர் இருந்த அறைக்கு சென்று, அவர்களுடைய அணி தலைவர் காரி சோபார்ஸை சந்தித்தார். சோபார்ஸிடம் நங்கள் பாலோ ஆன் விதியை அமுல் படுத்துகிறோம், உங்கள் அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் தொடரலாம் என்று கூறினார்.
இதை சற்றும் எதிர் பார்க்காத காரி சோபர்ஸ் மற்றும் முக்கிய மேற்கு இந்திய வீரர்கள் திகைத்துப் போய் நின்றனர். பிறகு விதி முறை விளக்கப் பட்டது. நடுவர்களிடமும் ஆலோசனை செய்து ஒரு வழியாக இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை துவங்கினர், மேற்கு இந்திய அணி வீரர்கள்.
முடிவில் அந்த மேட்ச் டிராவில் முடிந்தது. மேற்கு இந்திய அணியின் ரோகன் கன்ஹாய் 158 ரன்களும், காரி சோபர்ஸ் 93 ரன்களும் குவித்தனர். இருந்தும் அந்த பாலோ ஆன் சம்பவம், சிறந்த மேற்கு இந்திய தீவு அணியினரை கதி கலங்க செய்தது. மேலும் அந்த நிகழ்ச்சியின் தாக்கம், அவர்களிடையே அந்த சுற்றுப் பயணம் முழுவதும் எதிரொலித்தது.
இப்பொழுது எல்லாம் பாலோ ஆன் (Followon) கொடுப்பதை, சந்தர்ப்பம் இருந்தாலும், பெரும்பான்மையான அணிகளின் கேப்டன்கள் பாலோ ஆன் முறையை உபயோகிப்பது இல்லை. அதுவும் தற்பொழுது அதிகமாக ஒரு நாள் போட்டிகள், டி 20 கிரிக்கெட் மேட்சுகள் விளையாடுவதால், அதிக பட்ச ரன்களை குவிப்பதில் ஆர்வம், வேகம் அதிகரித்து விட்டது.
அதிக பட்ச ரன்கள் இலக்காக இருந்தாலும், விரட்டி, துரத்தி சென்று வெற்றி பெறுவது, சாதியமாகி விட்டது. இன்றைய சூழ்நிலையில் .பெரும்பாலான கேப்டன்கள் பாலோ ஆன் கொடுத்து ரிஸ்க் எடுக்க விரும்புவதும் இல்லை. எனவே பாலோ ஆன் தருவது ஓர் அறிய நிகழ்வாகி விட்டது.இது வரையில் டெஸ்ட் மேட்சுகளில் நான்கு முறை மட்டும் தான், பாலோ ஆன் கொடுத்த அணி தோல்வி அடைந்துள்ளது.மூன்று முறை தோல்வியை சந்தித்தது ஆஸ்திரேலிய அணி. ஒரு முறை இங்கிலாந்து அணி.
முதல் முறை. 1894 - 95 ஆஷஸ் தொடர்.
சிட்னி மைதானத்தில், முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 586 ரன்கள் எடுத்தது. சிட்னி க்ரெகிரி 201 ரன்கள் எடுத்தார். ( இது தான் டெஸ்ட் சரித்திரத்தில் அடிக்கப் பட்ட முதலாவது இரட்டை சதம். ) ஜார்ஜ் கிபன் 161 ரன்கள். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 325 ரன்கள். பாலோ ஆன் செய்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் எடுத்தது 437. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி பெறத் தேவைப்பட்ட ரன்கள் 177. வெற்றி இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்த பேட்டிங் அணியினரை சிறப்பான பந்து வீச்சால் ஆல் அவுட் செய்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய செய்தனர் இங்கிலாந்து அணி வீரர்கள்.
1981 ஆம் வருடம் இங்கிலாந்தில் மூன்றாவது டெஸ்ட் மேட்ச். ஹெட்டிங்லி மைதானத்தில். இயன் போதம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததால் , மைக் ப்ரேயிர்லி கேப்டன் பதவி ஏற்றார். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 401 ரன்கள் எடுத்தது. ஜான் ட்யசோன் 102 ( John Dyson) மற்றும் கிம் ஹுஜிஹெஸ் 89 ரன்கள் (Kim Hughes) எடுத்தனர். இயன் போதம் (Ian Botham) சிறப்பாக பந்து வீசி 6 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி களம் இறங்கினர், தங்களது முதல் இன்னிங்க்ஸை ஆட . ஆனால் வேக பந்துவீச்சாளர்கள் லில்லி ( Lillee) மற்றும் லாவ் சான்( Lawson) பவுலிங்கை தாக்குப் பிடிக்க முடியாமல் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். பாலோ ஆன் பெற்று ,இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் , இயன் போதம் எடுத்த 149 நாட் அவுட் ரன்கள் உதவியுடன் 129 ரன்கள் அதிகம் பெற்றனர்.
சுலபமாக ஆஸ்திரேலிய டீம் வென்று விடும் என்று எல்லோரும் எதிர் பார்த்த நிலையில் எதிர்பாராத ட்விஸ்ட் ஏற்பட்டது. வேகப்பந்து பவுலர் பாப் வில்லிஸ் ( Bob Willis) சிறப்பாக பந்துவீசி 43 ரன்கள் கொடுத்து 8 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனைப் படைத்தார்.111 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட். இங்கிலாந்து அணி வென்றது.
2001 ஆம் ஆண்டு. புகழ் பெற்ற ஈடன் கார்டன் மைதானம் , அன்றைய கல்கத்தா. ( இன்றைய கொல்கொத்தா ). ஸ்டீவ் வாக் தலைமையில் ஆன ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் எடுத்தது . இந்திய அணி சரி வர விளையாடாத தால் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது . வி வி எஸ் லட்சுமண் 59 ரன்களும், ராகுல் ட்ராவிட் 25 ரன்கள் அடித்தனர். பாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்க்ஸை பேட்டி ங் செய்ய துவங்கியது இந்திய அணி.
மறுபடியும் வி வி எஸ் லட்சுமண் , ராகுல் ட்ராவிட் ஜோடி கை கொடுத்தனர் தங்கள் மிக நேர்த்தியான , சிறப்பான ஆட்டத்தால். இந்த ஜோடி நான்காம் நாள் முழுவதும் சேர்ந்து இருந்து, ரன்களை குவித்த வண்ணம் இருந்தனர்.குறிப்பாக வி வி எஸ் லட்சுமண் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்தி 281 ரன்களும், ட்ராவிட் 180 ரன்கள் எடுத்து அசத்தி ஆஸ்திரேலிய பவுலர்களை திணற அடித்தனர்.
இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி டீமின் ஸ்கோர் 657 ரன்கள் இருக்கும் பொழுது டிக்ளர் செய்தார். இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இந்திய அணியின் சூழல் பந்து வீரர் ஹரபஜன் சிங் தனது பவுலிங் திறமையை இரண்டு இன்னிங்சிலும் வெளிப் படுத்தினார். முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளும், இரண்டாவதில் 6 விக்கெட்டுகளும் அள்ளி சாதனைப் புரிந்தார்.
ஹாட்ரிக் (Hat-trick) எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை மிக்க சாதனைப் படைத்தார் ஹர்பஜன் சிங். ஆட்ட நாயகன் விருது வி வி எஸ் லட்சுமண் பெற்றார். அந்தத் தொடரில் வெகு சிறப்பாக பந்து வீசி 32 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்பஜன் சிங்கிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப் பட்டது. ஆஸ்திரேலிய டீம் கேப்டன் ஸ்டீவ் வாக்( Steve Waugh) இந்த டெஸ்டில் சதம் எடுத்தார்.
நியூஸிலாந்தின் வெலிங்டன் பகுதியில் பிப்ரவரி 2023ல் நடை பெற்ற டெஸ்ட் மேட்ச் சரித்திரம் படைத்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 435 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து டிகிளேர் செய்தது. அடுத்து ஆடிய நியூ ஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். இங்கிலாந்து அணி தங்கள் இரண்டாம் இன்னிங்ஸ் பேட்டிங் தொடராமல், நியூஸிலாந்து அணிக்கு பாலோவ் ஆன் ( Foĺlowon) கொடுத்து அவர்களை இரண்டாம் முறை பேட்டிங் செய்ய பணித்தனர்.
நியூஸிலாந்து டீம் தங்கள் இரண்டாம் இன்னிங்சில் பிரமாதமாக விளையாடி 483 ரன்கள் குவித்தனர். அடுத்து தங்களது இரண்டாவது. இன்னிங்க்ஸை ( மேட்சிங் கடைசி இன்னிங்ஸ் ) ஆடிய இங்கிலாந்து அணி 256 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவினர். நியூஸிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி அடைந்து சரித்திரம் படைத்தனர். இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் 153 (Joe Root), ஹாரி ப்ரூக் 186 ,( Harry Brook) ரன்களும், நியூஸிலாந்து அணிக்காக கேன் வில்லியம்சன் 132 ( Kane Williamson) ரன்கள் எடுத்தனர். மேட்சின் மொத்த விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில்குறிப்பிட பட வேண்டியவர்கள் விவரம். நியூஸிலாந்தின் ஹென்றி 6 ( Henry), சௌதீ 4 ( Southee) , வாக்நர் 5 ( Wagner) , இங்கிலாந்தின் பிராட் 5 (Broad) , லீச் 8 ( Leach).
பாலோ ஆன் பெற்றும் வெற்றி பெறலாம் என்பதற்கு இந்த நான்கு டெஸ்ட் மேட்சுகளும் உதாரணமாக திகழ்க்கின்றன.
வாசுதேவன், பெங்களூரு