Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி “Clause 36.2.2” என்றால் என்ன? விராட் கோலியின் சர்ச்சை விக்கெட்.. விதியை பயன்படுத்தாதது ஏன்??

டெல்லி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலிக்கு சர்ச்சையான முறையில் அவுட் கொடுக்கப்பட்ட சூழலில் ஐசிசியின் Clause 36.2.2 என்ற விதிமுறை என்ன என்பதை ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த அந்த அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா 81 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும் விளாசினர்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் பேட்டிங்கில் அதிர்ச்சி தான் எனக்கூற வேண்டும். 21/0 என 2வது நாளை தொடங்கிய இந்திய அணி 66 /4 என மோசமான நிலைக்கு சென்றது. டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதன் பின்னர் வந்த விராட் கோலி தான் நிதானமாக இந்திய அணியை மீட்டுக்கொண்டு வந்தார். நன்றாக ஆடுவதால் எப்படியும் அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த சூழலில் 44 ரன்களுக்கு பெவிலியனுக்கு திரும்பி அதிர்ச்சி தந்தார்.

விராட் கோலி விக்கெட்

விராட் கோலி விக்கெட்

இந்நிலையில் கோலியின் விக்கெட் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேத்யூவ் குஹ்னெமேன் வீசிய பந்தை விராட் கோலி ஸ்ட்ரோக் வைத்த போது பேட்டிற்கும், பேடிற்கும் இடையே ஒரே நேரத்தில் பந்து பட்டது. ஆனால் பந்து முதலில் பேடில் தான் பட்டது என கள நடுவர் அவுட் கொடுத்துவிட்டார். இதற்கு கோலி உடனடியாக டி.ஆர்.எஸ் எடுத்த போது, 3வது நடுவர் பந்து முதலில் பேட்டில் பட்டதா? பேடில் பட்டதா ? என்ற ஆதாரம் கிடைக்கவில்லை எனக்கூறி ஆன் ஃபீல்ட் அம்பயரின் முடிவான அவுட்டையே கொடுத்தார்.

ஐசிசியின் விதிமுறை

ஐசிசியின் விதிமுறை

இந்நிலையில் ஐசிசியின் கிளாஸ் 36.2.2 என்ற விதிமுறை அதிகம் தேடப்பட்டு வருகிறது. அதாவது ஒரு பந்து வீரரின் பேட்டிலும் - பேடிலும் ஒரே நேரத்தில் பட்டது போல தெரிந்தால், அதனை பேட்டில் பட்டதாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. அந்த விதிமுறையின் படி பார்த்தால் விராட் கோலிக்கு நாட் அவுட் என்றே கொடுத்திருக்க வேண்டும்.

பின்னர் ஏன் செய்யவில்லை?

பின்னர் ஏன் செய்யவில்லை?

இரண்டு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பட்டது தெரிந்தவுடனேயே, ஐசிசி விதிமுறையை பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர் கள நடுவரின் முடிவுக்கு செல்வதாக வழக்கமான முடிவை எடுத்தார். கள நடுவர் நிதின் மேனன் பேடில் தான் பட்டது என உறுதியாக நின்றுவிட்டதால் துரதிஷ்டவசமாக கோலிக்கு அவுட் கொடுத்து அனுப்பப்பட்டது.

Story first published: Saturday, February 18, 2023, 14:50 [IST]
Other articles published on Feb 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+