டெல்லியில் கடைசி இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் என்ன? எவ்வளவு ரன்கள் இந்தியாவால் அடிக்க முடியம்..விவரம்
டெல்லி : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய ஆடுகளங்களில் பொதுவாக கடைசி இன்னிங்சில் விளையாடுவது மிகவும் கடினம்.
இதனால் தான் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் யார் அதிக ரன்கள் பெறுகிறார்களோ, அவர்களுக்கு வெற்றி சாதகமாக இருக்கும். ஆனால் இந்த டெஸ்டில் அப்படி ஒரு விசயத்தை ஆஸதிரேலியா பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
காரணம் முதலில் பேட்டிங் செய்த ஆஸதிரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முன்னிலை
நட்சத்திர வீரர் விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழக்க, ஒரு கட்டத்தில் இந்திய அணி 139 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற இலக்கை இழந்து விளையாடியது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறும் என்று எதிர்பார்த்தனர்.

இந்தியா அபாரம்
ஆனால் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஜோடி இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது. அஸ்வின் 37 ரன்களில் வெளியற, அக்சர் பட்டேல் அதிகபட்சமாக 74 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 1 ரன் மட்டுமே முன்னிலை பெற்றது.

டெல்லி ரெக்கார்ட்
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் கடைசி இன்னிங்சில் வெற்றிகரமாக அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் குறித்து தற்போது காணலாம். அதிகபட்சமாக டெல்லியில் 4வது இன்னிங்சில் 276 ரன்கள் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணி 1986ஆம் ஆண்டும், இந்திய அணி 2011ஆம் ஆண்டு அடித்து வெற்றி பெற்றது.

எது நல்ல ஸ்கோர்
இதே போன்று டெல்லியில் விளையாடப்பட்ட 36 டெஸ்ட் போட்டியில் 11 முறை கடைசி இன்னிங்சில் வெற்றிகரமாக இலக்கு துரத்தப்பட்டுள்ளது. இதனால் தற்பாது ஆஸ்திரேலியாவை 200 ரன்களுக்குள் 2வது இன்னிங்சில் சுருட்ட வேண்டும். 150 அல்லது அதற்கு மேல் ரன்கள் சென்றால் இந்தியா வெற்றி பெறுவது கடினமாகும்.


Click it and Unblock the Notifications