Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேற்று இப்படி ஒரு சம்பவம் நடந்ததா?.. இந்த வீடியோவை பாருங்க.. இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்!

சென்னை: நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பது வீடியோ ஒன்றின் மூலமும் தெளிவாகி உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாப தோல்வி அடைந்தது. நல்ல அணியை தேர்வு செய்தும் கூட இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை.

அதிலும் சென்னை பிட்சில் 22 வருடங்களுக்கு பிறகு தோல்வியை தழுவி இந்திய அணி பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

காரணம்

காரணம்

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பது வீடியோ ஒன்றின் மூலமும் தெளிவாகி உள்ளது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் வரை இந்திய அணி வீரர்களுக்கு வெற்றிபெற்று விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஸ்பின் பவுலிங் மட்டுமே இந்திய அணிக்கு பிரச்சனையாக இருந்தது.

பிரச்சனை

பிரச்சனை

ஆனால் அதையும் கூட பண்டை வைத்து எதிர்கொண்டு விடலாம் என்று இந்திய அணி திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்திய அணிக்கு எதிராக நேற்று ஸ்பீட் பவுலிங்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலும் நேற்று ஆர்ச்சர் பவுலிங் எல்லாம் அவ்வளவே சிறப்பாக இல்லை. ஆண்டர்சன் பவுலிங்தான் இந்திய அணிக்கு சிக்கலானது.

ஆண்டர்சன்

ஆண்டர்சன்

நேற்று ஆண்டர்சன் பவுலிங் செய்த எல்லா ஓவர்களிலும் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. இதை இந்திய அணி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த ரிவர்ஸ் ஸ்விங்தான் ஒவ்வொரு வீரரின் விக்கெட்டுக்கும் காரணமாக அமைந்தது. ரஹானே, கில், பண்ட் என்று எல்லோருமே இந்த ரிவர்ஸ் ஸ்விங் மூலம்தான் அவுட் ஆனார்கள்.

வீடியோ

பிட்ச் மொத்தமாக கணிக்க முடியாத அளவிற்கு மாறியதுதான் இதற்கு காரணம். நேற்று ஆண்டர்சன் எடுத்த விக்கெட்டுகளின் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோக்களை பார்த்தாலே பிட்ச் எந்த அளவிற்கு மோசமாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகி உள்ளது என்று தெரிகிறது. அதிலும் கில், ரஹானே அவுட் ஆன விதம் எல்லாம் கணிக்க முடியாதது.

கணிப்பு

கணிப்பு

பந்து மொத்தமாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகி உள்ளே சென்று கில், ரஹானே இருவரும் அவுட்டாகி உள்ளனர். இதுதான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. அடுத்தடுத்து ரிவர்ஸ் ஸ்விங் மூலம் இரண்டே ஓவரில் ஆண்டர்சன் விக்கெட்டுகளை காலி செய்தது இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

Story first published: Wednesday, February 10, 2021, 16:05 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+