Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தோனிக்கு ஹெல்ப் பண்ணுங்கப்பா…! மெட்ராஸ் ஐஐடி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி… விவரம் இதுதான்

Recommended Video

IPL 2019: மெட்ராஸ் ஐஐடி வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி!.. விவரம் இதுதான்- வீடியோ

சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி குறித்து ஐஐடி மெட்ராஸ் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்வி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. அடுத்து நடைபெறும் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 4 அணிகள் தகுதி பெற்று உள்ளன. இதுவரை விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடரிலும் ப்ளே ஆப் சென்ற அணி சாதனையை சென்னை படைத்துள்ளது.

What should dhoni can do if win toss against mumbai indians?

2 ஆண்டுகள் தடைக்கு பின் கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய சென்னை, சாம்பியன் பட்டம் பெற்று, அசத்தியது. இதுவரை சென்னை அணி மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. தற்போதைய தொடரில் 18 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மும்பை அணியுடன் இன்று தகுதிசுற்று போட்டியில் விளையாடுகிறது.

இந்நிலையில் ஐஐடி மெட்ராஸ் கல்லூரியின் செமஸ்டர் வினாத்தாளில் ப்ளே ஆப்பில் சென்னை அணி விளையாடுவது குறித்து ஒரு கேள்வி ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த வினாத்தாளின் புகைப்படத்தை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த கேள்வித்தாளில், சென்னையில் கிளைமேட் பற்றியும், போட்டியில் டாஸ் வெல்லும் பட்சத்தில் தோனி எந்த முடிவை எடுக்கவேண்டும், பேட்டிங்கா? அல்லது பவுலிங்கா? என்று சொல்லுமாறும் கேட்கப்பட்டுள்ளது. அதை ஐசிசி தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளது.

Story first published: Tuesday, May 7, 2019, 11:34 [IST]
Other articles published on May 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+