2 மாற்றம்.. அந்த வீரருக்கு டாட்டா காட்ட முடிவு.. நாளைய போட்டியில் ஆடும் பிளேயிங் 11.. கசிந்த தகவல்
அகமதாபாத்: இங்கிலாந்து எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஆட போகும் வீரர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் நாளை நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த போட்டி பிங்க் பால் போட்டியாகும். இரவு பகல் ஆட்டம் என்பதால் இதில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று இந்திய அணி தீவிரமாக முயன்று வருகிறது.

வீரர்கள் யார்
இங்கிலாந்து எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஆட போகும் வீரர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த போட்டியிலும் இந்திய அணியில் 5 பவுலர்கள் இடம்பெறுவார்கள். ஆனால் இரண்டு ஸ்பின் பவுலர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள்.

மூன்று பேர்
இதில் மூன்று பாஸ்ட் பவுலர்கள் ஆடுவார்கள். முதலில் மூன்றாவது பாஸ்ட் பவுலராக பாண்டியா பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இவர் பவுலிங் செய்ய திணறியதால் அவரின் பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது. இவர் அணியில் இடம்பெற போவதில்லை.

உமேஷ்
இதன் காரணமாக அணிக்குள் மீண்டும் உமேஷ் யாதவ் வருவார். குல்தீப் நீக்கப்படுவதால் பும்ரா அணிக்குள் மீண்டும் வருகிறார். சிராஜ், குல்தீப் ஆகிய இரண்டு வீரர்களும் மீண்டும் ஓரங்கட்டப்பட உள்ளனர்.

பேட்டிங் ஆர்டர்
அதேபோல் பேட்டிங் ஆர்டரில் அஸ்வினுக்கு புரமோஷன் கொடுக்கப்பட உள்ளது. பண்டிற்கு அடுத்து அஸ்வின்தான் பேட்டிங் இறங்க உள்ளார். கில் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதால் அவர் மீண்டும் அணிக்குள் வர இருக்கிறார்.

அணி விவரம்
இதன் காரணமாக இங்கிலாந்து எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கோலி, ரோஹித், கில், புஜாரா, ரஹானே, பண்ட், அஸ்வின் , அக்ஸர், பும்ரா, உமேஷ், இஷாந்த் சர்மா ஆகியோர் ஆட உள்ளனர்.


Click it and Unblock the Notifications