Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றிபெற்றால் மட்டும் விட்டுவிடுவோமா?.. இந்திய அணியில் செய்யப்படும் மாற்றம்.. இதுதான் பிளேயிங் 11?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இருந்தாலும் அடுத்து நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களை விட மிகவும் விறுவிறுப்பாக டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு பதிலடியாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடி வெற்றியை ருசித்தது.

வெற்றி

வெற்றி

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே இருந்தார். ரஹானேவின் தலைமையின் கீழ் களமிறங்கி ஆடிய இந்திய அணி கோலி, ஷமி, ரோஹித் இல்லாமலே மாஸ் வெற்றியை ருசித்து இருக்கிறது. சிறப்பான பவுலிங் மூலம் இந்திய அணி இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது.

மாற்றம்

மாற்றம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இருந்தாலும் அடுத்து நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அதன்பின் இந்திய அணியில் 2-3 மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

இந்திய அணியில் அடுத்த போட்டியில் செய்யப்படும் கட்டாய மாற்றம் என்றால் அது உமேஷ் யாதவ் நீக்கம். காயம் காரணமாக உமேஷ் யாதவ் வெளியேறி உள்ள நிலையில் அவருக்கு மாற்றாக சைனி களமிறங்க உள்ளார். நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டாலும் டெஸ்ட் பயிற்சி முன்னுரிமையின் படி சைனி இந்திய அணிக்குள் சேர்க்கப்படுவார்.

வேறு

வேறு

அதேபோல் இன்னொரு பக்கம் ரோஹித் சர்மா இந்திய அணியில் இணைய உள்ளார். இதனால் இந்திய அணியின் ஓப்பனிங்கில் சொதப்பி வரும் மயங்க் அகர்வால் அணியில் இருந்து நீக்கப்படுவார். 5 பவுலர்களை கண்டிப்பாக இந்திய அணி பயன்படுத்தும் என்பதால் ரோஹித் சர்மாவை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்காக மயங்க் அகர்வாலை ரஹானே நீக்குவார் என்று கூறப்படுகிறது.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அதேபோல் இன்னொரு பக்கம் இந்திய அணியில் ஹனுமா விஹாரி நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்கள். ஆம், ஹனுமா விஹாரி டெஸ்ட் போட்டியில் சரியாக ஆடவில்லை. இவருக்கு பல முறை வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்ட நிலையில் இந்திய அணியில் ஹனுமா விஹாரிக்கு பதில் கே. எல் ராகுல் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், ரஹானே, புஜாரா, ஜடேஜா, பண்ட், ராகுல் அல்லது விஹாரி, பும்ரா, சைனி, சிராஜ், அஸ்வின் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்றது கருதப்படுகிறது.

Story first published: Wednesday, December 30, 2020, 9:38 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+