Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேறு யாருமே இல்லை.. இக்கட்டான நிலையில் இந்திய அணி.. பும்ரா, ஜடேஜா அவுட்.. நடராஜன், ஷரத்துல் இன்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மூத்த பவுலர்கள், ஆல் ரவுண்டர் காயம் அடைந்துள்ள நிலையில் நடராஜன் அணிக்குள் இடம்பெறுவார் என்று கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளார். பும்ரா இல்லாமல் இந்திய அணி ஆட உள்ளது. இவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த காயம் தற்போது சிறியதாகவே உள்ளது. இது பெரிதாக கூடாது என்பதால் பாதுகாப்பு கருதி தற்போது பும்ரா நீக்கப்பட்டுள்ளார்.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் இன்னொரு பக்கம் இந்திய அணியில் விஹாரி, ஜடேஜா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறுகிறார்கள் . விஹாரிக்கு பதிலாக இந்திய அணிக்குள் மீண்டும் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட உள்ளார் என்கிறார்கள்.

வேறு யார்

வேறு யார்

அதேபோல் ஜடேஜாவிற்கு பதிலாக அணிக்குள் குல்தீப் யாதவ் கொண்டு வரப்படுவார் என்று கூறப்படுகிறது. பும்ராவிற்கு பதிலாக அணிக்குள் ஷரத்துல் தாக்கூர் வருவார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்திய அணியில் பும்ரா இல்லாமல் யார்க்கர் போடும் பவுலர்கள் குறையும் நிலை ஏற்படும்.

மோசமான நிலை

மோசமான நிலை

இதனால் அணியில் இருந்து சைனி நீக்கப்பட்டு நடராஜன் சேர்க்கப்படுவார் என்று கூறுகிறார்கள். அடுத்த போட்டியில் இந்திய அணியில் சிராஜ்தான் பவுலிங் படையை வழி நடத்த போகிறார் என்று கூறுகிறார்கள். ஷமி, உமேஷ் , இஷாந்த், புவனேஷ்வர்குமார், பும்ரா என்று எல்லோரும் காயம் அடைந்துள்ளதால் இந்திய அணிக்கு வேறு வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிலை எப்படி

நிலை எப்படி

அதன்படி அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, சுப்மான் கில் , ரஹானே, பண்ட், அஸ்வின், ஷரத்துல் தாக்கூர், சிராஜ், நடராஜன், குல்தீப் ஆகியோர் ஆட உள்ளனர் என்று கூறப்படுகிறது .

Story first published: Tuesday, January 12, 2021, 11:09 [IST]
Other articles published on Jan 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+