Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய வீரருக்கு கல்தா.. ஓரம்கட்டப்படும் பலர்.. சென்னையில் நடக்கும் முதல் டெஸ்ட்.. பிளேயிங் 11!?

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியின் உத்தேச பிளேயிங் லெவன் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது .

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று மிக நீண்ட தொடர் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடக்க உள்ளது.

இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது. இதற்காக வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

தயார் நிலை

தயார் நிலை

இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் நேற்று வெளியாகி உள்ளது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்திய அணியில் முதல் டெஸ்டில் ஆட போகும் பிளேயிங் 11 குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி , துணை கேப்டன் ரஹானே, புஜாரா, ரோஹித் சர்மா ஆகியோர் கண்டிப்பாக ஆடுவார்கள். ஓப்பனிங் வீரராக சுப்மான் கில்லும் களமிறங்குவர்.

 5 வீரர்கள்

5 வீரர்கள்

இந்த 5 வீரர்களில் மாற்றம் எதுவும் இல்லை. இது போக இந்திய அணியில் பும்ரா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் ஸ்பீட் பவுலர்களாக களமிறங்குவார்கள். இந்த 8 பேர் போக மீதம் உள்ள 3 வீரர்களில் இரண்டு ஸ்பின் பவுலர் இறங்க உள்ளனர்.

இரண்டு பேர்

இரண்டு பேர்

அதன்படி அஸ்வின் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் ஆகிய இரண்டு ஸ்பின் பவுலர்கள் இந்திய அணியில் இறங்குவார்கள். இது போக கீப்பராக ரிஷாப் பண்ட் களமிறங்குவார். இந்த அணி மிகவும் வலிமையானதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

அணி எப்படி

அணி எப்படி

அதன்படி இந்திய அணியில் கேப்டன் கோலி , துணை கேப்டன் ரஹானே, புஜாரா, ரோஹித் சர்மா, சுப்மான் கில், பண்ட், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர், ஷரத்துல் தாக்கூர்,சிராஜ், பும்ரா ஆகியோர் களமிறங்க உள்ளனர். பும்ரா வரை எல்லோரும் நன்றாக பேட்டிங் செய்வார்கள் என்பதால் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டும் வலுவாக இருக்கும் என்கிறார்கள்.

நீக்கம்

நீக்கம்

இதில் கே. எல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்காது. அதேபோல் மயங்க் அகர்வால் சரியாக ஆடாத காரணத்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது. மீதம் இருப்பதில் அக்சர் பட்டேல், குல்தீப் ஆகியோர் யாருக்காவது காயம் ஏற்பட்டால் அணியில் வாய்ப்பு பெறுவார்கள்.

Story first published: Thursday, January 28, 2021, 14:04 [IST]
Other articles published on Jan 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+