Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. இன்னும் ஒரு வருசம் தான்.. அதுக்கப்புறம்.. சிக்கலில் சிஎஸ்கே அணி!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட அனைத்து அணிகளும் 2021இல் ஐபிஎல் மெகா ஏலத்தை சந்திக்க வேண்டும்.

Recommended Video

What would happen to CSK after Dhoni left ?

அப்போது தோனி மீண்டும் கிரிக்கெட் ஆடும் நிலையில் இருப்பாரா? என்பது கேள்விக் குறி தான்.

2020 ஐபிஎல் தொடர் நடப்பது சந்தேகமாக இருக்கும் நிலையில், ஓராண்டு கிரிக்கெட் ஆடாமல் தோனி மீண்டும் சிஎஸ்கே அணியில் ஆடுவது சந்தேகம் தான்.

சிஎஸ்கே அணியின் கொள்கை

சிஎஸ்கே அணியின் கொள்கை

தோனி இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிலைமையை சிந்தித்து பார்த்தால் கொஞ்சம் பகீர் என்று தான் இருக்கிறது. முதலில் பழைய வீரர்களை நாங்கள் அப்படியே வைத்துக் கொள்வோம் என்ற சிஎஸ்கே அணியின் கொள்கை. தோனி இருக்கும் வரை அது சரிதான். அவர் இல்லாத போது?

கேப்டன் யார்?

கேப்டன் யார்?

2021 மெகா ஏலத்தில் தோனியை தேர்வு செய்யாமல், தற்போதைய அணியின் வீரர்களை அப்படியே சிஎஸ்கே அணி வாங்குகிறது என வைத்துக் கொள்வோம், அப்போது சுரேஷ் ரெய்னா அல்லது பிராவோவை தான் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டி இருக்கும்.

தோனியை நம்பிய அணி

தோனியை நம்பிய அணி

அவர்கள் தோனி அளவுக்கு கேப்டன்சியில் கலக்குவார்களா? என்பது சந்தேகம் தான். "தோனி இருக்க பயமேன்" என இத்தனை காலமும் சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் வீரர்கள் என அனைவரும் ஒவ்வொரு போட்டிக்கும் அவர் எடுக்கும் முடிவை அப்படியே ஏற்றுக் கொண்டு வந்துள்ளனர்.

பெரிய தடுமாற்றம் ஏற்படும்

பெரிய தடுமாற்றம் ஏற்படும்

இனி தோனி இல்லாத சிஎஸ்கே அணியில் அப்படி ஒரு வழிகாட்டி இல்லாத நிலையில் பெரிய தடுமாற்றம் ஏற்படும். மற்ற அணிகள் எல்லாமே பல வெற்றி, தோல்விகளை சந்தித்து அதில் அனுபவம் பெற்று பல பயிற்சியாளர்கள், கேப்டன்களை மாற்றிய அனுபவமும் உள்ளது.

மற்ற அணிகளின் வேகம்

மற்ற அணிகளின் வேகம்

அவை எதுவுமே சிஎஸ்கே அணிக்கு இருக்காது. வயதான வீரர்கள் அணி என கிண்டல் செய்யப்படும் சிஎஸ்கே அணி, ஒருவேளை 2021ஆம் ஆண்டு ஏலத்திலும் அதே வீரர்களை மீண்டும் தேர்வு செய்தால், மற்ற அணிகளின் இளம் வீரர்களின் வேகத்துக்கு இந்த அணியால் ஈடு கொடுக்க முடியாமல் போகும்.

2021 ஏலம் தான் எதிர்காலம்

2021 ஏலம் தான் எதிர்காலம்

அதே சமயம், தோனி இருந்தால் நிலைமை வேறு. கேப்டனாக அவரது வியூகம் எப்படியோ எதிரணியை சமாளித்து விடும். எனவே, 2021ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப் போகும் ஆண்டு. அப்போது ஏலத்தில் அந்த அணி தேர்வு செய்யப் போகும் வீரர்கள் மற்றும் அந்த ஒரு கேப்டன் தான் அந்த அணியின் எதிர்காலம்.

ஆலோசகர் தோனி?

ஆலோசகர் தோனி?

அதே சமயம், தோனி ஓய்வு பெற்றாலும், சிஎஸ்கே அணியில் ஆலோசகராக இருப்பார் என சிலர் கூறி வருவதை கருத்தில் கொண்டால், அப்போதும் அந்த அணி "தோனி இருக்க பயமேன்" என்ற நிலையிலேயே அவர் ஆலோசகராக இருக்கும் வரை தொடரும் என நம்பலாம். அது அந்த அணிக்கு வெற்றியை தேடித் தரவும் வாய்ப்பாக அமையும்.

Story first published: Friday, May 8, 2020, 18:21 [IST]
Other articles published on May 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+