தோனி சொன்ன மறுபேச்சே இல்ல…! கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… !
Recommended Video
மும்பை:தோனி சொன்னால் அதற்கு ஒரு போதும் மறுபேச்சே இல்லை என்று இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் கூறி இருக்கிறார்.
ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா. அவர்கள் இருவரையும் ஓரம் கட்டிவிட்டு, தங்களது சிறப்பான பந்து வீச்சினால் 2017 ம் ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து அணியில் இடம் பிடித்து வந்தவர்கள் சஹால் மற்றும் குல்தீப்.
அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரையும் ஓரம் கட்ட மிக முக்கிய காரணம் உள்ளது. இந்த இருவரும் இந்திய மண்ணில் மட்டுமே சிறப்பாக முத்திரை பதித்தனர். வெளிநாடுகளில் எதிர்பார்த்த அளவிற்கு அவரது செயல்பாடுகள் சிறப்பாக இல்லை.

சிறந்த ஜோடி
ஆனால் சுழற்பந்துவீச்சாளர்களான சஹால் மற்றும் குல்தீப் ஜோடி இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் குறிப்பாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். குல்தீப் மற்றும் சஹால் இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகித்தவர் தோனி.

உதவிய தோனி
அணியில் பல நேரங்களில் அனைத்து விதங்களில் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். இந் நிலையில், தோனி உதவியது குறித்து சஹால் கூறியதாவது: எங்களது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருப்பவர் தோனிதான்.

திருத்தும் செயல்பாடுகள்
எது நடந்தாலும் எங்களுக்கு உதவியாக தோனி இருப்பார். நாங்கள் தவறாக செல்லும் ஒவ்வொரு முறையும், எங்களைத் திருத்தும் நடவடிக்கையில் தோனி இறங்கி இருக்கிறார்.

எங்களுக்கு ஆசான்
குல்தீப் எனக்கு சிறந்த ஜோடி. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருவரும் ஒன்றாக ஆடினோம். இருவரும் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக ஒன்றாக ஆடி வருகிறோம். இது எங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் உதவி வருகிறது. அதற்கும் மேல் சொல்ல வேண்டுமானால் தோனி எங்களுக்கு ஒரு ஆசான் என்றார்.


Click it and Unblock the Notifications