இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் வாட்மோர்
![]() |
டாக்கா:இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விரும்பம் தெரிவித்துள்ளார் வங்கதேசத்தின் பயிற்சியாளர் வாட்மோர்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கிரேக் சேப்பல் உலக கோப்பை தோல்வியால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந் நிலையில் இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதற்கு தற்காலிக பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்பட்டு வருகிறார்.
தற்போது வங்கதேச பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வாட்மோரை புதிய பயிற்சியாளராக நியமிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக வாட்மோருடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி இந்திய கிரிக்கெட் சங்கம் ரவி சாஸ்திரியிடம் கூறியது. இதையடுத்து ரவிசாஸ்திரி வாட்மோரை சந்தித்து முதல் கட்ட பேச்சு நடத்தினார்.
நாளை கிரிக்கெட் சங்க தலைவர் சரத்பவார், செயலாளர் நிரஞ்சன் ஷா ஆகியோர் டாக்கா சென்று வாட்மோருடன் பேச்சுநடத்தவுள்ளனர்.
ரவி சாஸ்திரியுடன் நடந்த பேச்சு வார்த்தை குறித்து வாட்மோர் நிருபர்களிடம் கூறியாதாவது,
ரவிசாஸ்திரியுடன் நடந்த முதல் கட்ட பேச்சு வார்த்தை திருப்திகரமாக இருந்தது. எனது விருப்பங்கள், எண்ணங்களை அவரிடம் தெரிவித்தேன். அவரும் சிலவற்றை தெரிவித்தார். இருவரும் ஏற்றுக் கொண்டோம். இந்திய அணிக்கு பயிற்சியாளராக வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இந்திய கிரிக்கெட் சங்கம் என்ன நினைக்கிறதோ, எந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என நினைக்கிறார்களோ அதை நான் நிறைவேற்றுவேன். என்னுடைய அணுகுமுறை, வித்தியமான பயிற்சி மூலம் இந்திய அணியை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்றார் அவர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
