டோணியின் கண் கலங்கும் புகைப்படம், கல் மனத்தவர்களையும் கரைத்துவிட்டது. எனவே டோணிக்கு ஆதரவாக, ரசிகர்கள் கைகோர்த்து இணைந்துள்ளனர். #wearewithyoudhoni ஹேஸ்டேக்கை ரசிகர்கள் பயன்படுத்தி தங்களது ஆதரவை கூறிவருகின்றனர். வாட்சப்பிலும் டோணி பற்றிய ஒரு கவிதை சுற்றுகிறது. அதை பாருங்கள்..
காதல் மனைவி இங்கு
பிரசவ வழியில் துடிக்க
அப்பொழுது அவள் கை பிடிக்க
அங்கு நீ இல்லை.....!!!

உனக்கு தந்தை ஸ்தானம் தந்த
உன் பிஞ்சு மகளின்
முதல் அழுகையை ரசித்து
அவளை உன் கை ஏந்த
அங்கு நீ இல்லை.....!!!
நாட்டுக்காக உன் வீட்டை மறந்து
ஒருமனதுடன் தவமிருந்தாய்
உலகக் கோப்பை என்ற அந்த
ஒற்றை வரம் கிடைக்க...!!
வரலாற்று வெற்றிகள்
வரிசையாகத் தந்தாய்...
இன்று, நீ பெற்றுள்ள
ஒற்றைத் தோல்வியால்
மனம் வருந்தி கண் கலங்காதே...!!
உன் சிரித்த முகத்தை மட்டுமே
பார்த்து தெம்புற்ற எங்களால்
உன் கலங்கிய கண்களைப்
பார்க்க முடியவில்லை அண்ணா....!!!
வீணாக சிந்தி விடாதே
பொன்னான உன் கண்ணீரை,
வென்றாலும்.. தோற்றாலும்..
நீ என்றும் எங்கள் வெற்றி நாயகனே..!!