Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன நம்ம வீட்டு கல்யாணத்தில் அனுஷ்கா – கோலியா? – இது ஐசிசி வேர்ல்ட் கப் கலாட்டா!

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை விஜய் டிவி தமிழில் முதல் முறையாக தொகுத்து வழங்கி வருகின்ற நிலையில் ஒருவேளை இந்தியா உலக கோப்பையில் ஜெயித்தால் விஜய் டிவி என்னவெல்லாம் செய்யும் என்ற கலகலப்பான ஜோக் வாட்ஸப்பில் உலவி வருகின்றது.

விஜய் டிவி நிகழ்ச்சிக்களையும், கிரிக்கெட் வீரர்களையும் வைத்து உலா வருகின்ற இந்த ஜோக் வயிற்றை சிரித்து, சிரித்து புண்ணாக்க வைக்கின்றது.

அந்த ஜோக் எல்லாருக்காகவும் இங்கு.... விஜய் டிவிக்காரர்களே மன்னிக்கவும்.... இது ஜஸ்ட் சிரிக்கத்தான்....

காபி வித் தோனி:

காபி வித் தோனி:

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் தோனியும், அஸ்வினும் காபி வித் டிடியில், திவ்யதர்ஷினியுடன் அமர்ந்து உரையாடுவார்கள்.

இது கிரிக்கெட் கல்யாணம்:

இது கிரிக்கெட் கல்யாணம்:

கிரிக்கெட்டின் நட்சத்திர காதல் ஜோடியான விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கல்யாணம் கட்டிக் கொண்டு "நம்ம வீட்டு கல்யாணம்" நிகழ்ச்சியில் கல்யாண கலாட்டாக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

மேட்ச்சுக்கு நடுவிலும் டிஸ்டர்ப் பண்ணுவோம்:

மேட்ச்சுக்கு நடுவிலும் டிஸ்டர்ப் பண்ணுவோம்:

ரெய்னா, ஜடேஜா, ரோகித், மோகித் ஆகியோர் பாலாஜி, ஈரோடு மகேஷுடன் நடுவில் கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் நிகழ்ச்சியில் கிரிக்கெட் மட்டையுடன் கலந்து கொள்வார்கள் ஷாக் அடிக்கும் ரவுண்டிலிருந்து தப்பிக்க.

கண்ணா இது எங்க சமையல்:

கண்ணா இது எங்க சமையல்:

மேற்படி ராயுடு "கிச்சன் சூப்பர் ஸ்டார்" நிகழ்ச்சியில் கரண்டி பிடித்து ஹைதராபாத்தி பிரியாணி செய்து தருவார்.

அப்படித்தான் சூடு பறக்கணும்:

அப்படித்தான் சூடு பறக்கணும்:

மற்ற எல்லா கிரிக்கெட் வீரர்களும் நீயா, நானவில் ஆவி, பேய் எல்லாம் பறக்க "இந்தியா கப் ஜெயிச்சதுக்கு காரணம் பேட்டிங்கா? பவுலிங்கா?" என்று கோபிநாத்துடன் சண்டை போடுவார்கள்.

இந்தாங்க… இந்தாங்க:

இந்தாங்க… இந்தாங்க:

கடைசிகடைசியாக எல்லா வீரர்களுக்கும் ரூபாய் 2000 மதிப்புள்ள நளாஸ் ஆப்பக்கடை கூப்பன் இலவசமாக வழங்கப்படும்.

Story first published: Thursday, February 19, 2015, 6:40 [IST]
Other articles published on Feb 19, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+