இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை 2022.. எங்கு ? எப்படி பார்ப்பது?.. போட்டி நேரங்கள் என்னென்ன?
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
Recommended Video
மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு, நடத்தப்படுகின்றன.
இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் ஏ குரூப்பிலும், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை தொடர்
இந்த தொடரின் முதல் போட்டியாக இன்று இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடந்துகின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் இதே துபாய் மைதானத்தில் தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி விவரங்கள்
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை போட்டிகள் எங்கு? எப்படி ? என்பது குறித்து தற்போது பார்க்கலாம். லீக் சுற்றுகள், அரையிறுதி, இறுதிப் போட்டி என அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7.30 மணிக்கு போட்டி துவங்கும்.

எப்படி பார்ப்பது?
ஆசிய கோப்பை போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எனவே தமிழ், ஆங்கிலம், இந்தி மொழி கமெண்ட்ரிகளுடன் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கண்டுகளிக்கலாம். இந்திய போட்டிகளை மட்டும் டிடி ஸ்போர்ட்ஸும் இலவசமாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.

ஆன்லைன் உரிமம்
இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்க்க முடியாமல் போகும் ரசிகர்கள், ஆன்லைன் மூலம் பார்க்கலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டார் மூலம் மொபைலிலும் போட்டியை நேரலையில் பார்க்கலாம். இதற்காக ஸ்பெஷல் குறைந்த விலை சந்தாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications