இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி.. எங்கு? எப்படி பார்ப்பது? இந்திய நேரம் என்ன? முழு விவரம்
ஆக்லாந்து: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரை எப்படி பார்ப்பது என்ற குழப்பம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 1 - 0 என கைப்பற்றி அசத்திய இந்திய இளம் படை அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தயாராகிவிட்டது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் போட்டி நாளை ஆக்லாந்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு நடக்கும்?
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அணி டி20 தொடரை வென்ற சூழலில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஷிகர் தவான் வழி நடத்தவிருக்கிறார். இந்த போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கும். நியூசிலாந்தின் உள்ளூர் நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

எப்படி பார்ப்பது?
இந்த போட்டியை நேரலையாக பார்க்க விரும்புவோர், அமேசான் பிரைம் செயலியில் பார்க்கலாம். இதே போல தொலைக்காட்சியில் பார்க்க விரும்புவோர், இந்த முறை ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பார்க்க தேவையில்லை. ஏனென்றால் தூர்தர்தஷன் சேனலில் தான் நேரலை ஒளிபரபரப்பு செய்யப்படுகிறது.

ப்ளேயிங் 11
ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல்

பிட்ச் நிலைமை
ஆக்லாந்தில் உள்ள பிட்ச்-ல் இருபுறமும் உள்ள பவுண்டரிகளின் ஸ்ட்ரெய்ட் திசையில் 55 மீட்டர்களும், இரு புறங்களும் 65 மீட்டர்களும் மட்டுமே இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்கல் சரியாக பேட்டில் பட்டால் மட்டும் போதும், சிக்ஸர் தானாக சென்று விடும். முதல் சில ஓவர்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், மிடில் ஓவர்களில் பிட்ச் ஸ்லோவாகி, ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமையும்.


Click it and Unblock the Notifications