
முதல் ஒருநாள் ஆட்டம்
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இதனையடுத்து ஷிகர் தவான் தலைமையிலான இளம்படை தான் வெஸ்ட் இண்டீஸை சமாளிக்க களமிறங்கியுள்ளது. எனவே அவர்களின் செயல்பாட்டை காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

எப்படி பார்ப்பது?
இந்நிலையில் இந்த போட்டியை எப்படி பார்க்கலாம் என்ற தகவலை தெரிந்துக்கொள்ளுங்கள். வழக்கமாக இந்திய அணியின் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அல்லது சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை டிடி ஸ்போர்ட்ஸ் வாங்கியுள்ளது.

ஆன்லைனில் நேரலை
செல்போன்களில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரை பார்க்க விரும்பும் ரசிகர்கள், FANCOD எனும் செயலியில் நேரலையாக கண்டுக்களிக்கலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தூர்தர்ஷனில் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எப்போது போட்டி?
இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி ட்ரினிடாட்டில் உள்ள குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி சரியாக இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











