ஐபிஎல் 2023 மினி ஏலம் தொடங்கும் நேரம்.. எங்கு? எப்படி பார்ப்பது?.. யாரும் எதிர்பார்க்காத ஸ்பெஷல் ஏற்பாடு!
கொச்சி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலத்தை எங்கு? எப்படி? பார்ப்பது என்பது குறித்த கேள்விகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் கேட்கப்பட்டு வருகின்றன.
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நாளை ( டிசம்பர் 23ம் தேதி ) நடைபெறவுள்ளது. மினி ஏலமான இது கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசிக்கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மினி ஏலத்திற்காக 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டன. அதன்படி மொத்தம் 87 இடங்களை நிரப்புவதற்கான வீரர்கள் ஏலமாக நாளைய தினம் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் ஏலம்
இந்தமுறை சிறிய ஏலம் தான் என்ற போதும், 3 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நேற்றைய தினம் ( டிசம்பர் 21 ) அயல்நாட்டு வீரர்களின் பங்கேற்பு, புதிய விதிமுறைகள் குறித்து அணி நிர்வாகங்களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. இன்று ஒத்திகை ஏலம் நடத்தப்படவுள்ளது. நாளை ( டிசம்பர் 23)ம் தேதி வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது.

போட்டி நேரம் என்ன?
மதியம் 2.30 மணி முதல் இந்த ஏலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைனில் பார்க்க விரும்புவர்கள் ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியாது. ஜியோ நிறுவனத்தின் ஜியோ சினிமா செயலில் கண்டுகளிக்கலாம். தொலைக்காட்சியில் பார்க்க விரும்புவர்கள், வழக்கம் போல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 20.45 கோடி (9 இடங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் - ரூ 19.25 கோடி (10 இடங்கள்)
டெல்லி கேபிடல்ஸ் - ரூ 19.45 கோடி (7 இடங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 7.05 கோடி (14 இடங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ 23.35 கோடி (14 இடங்கள்)
பஞ்சாப் கிங்ஸ் - ரூ 32.2 கோடி (12 இடங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ 8.75 கோடி (9 இடங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 13.2 கோடி (13 இடங்கள்)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 42.25 கோடி (17 இடங்கள்)

வீரர்களின் தொகை விவரம்
87 இடங்களில் 30 இடங்கள் அயல்நாட்டு வீரர்களுடையது ஆகும். இதற்காக மொத்தம் 405 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். இதில் ரூ.2 கோடி என்ற அடிப்படை தொகையில் 19 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒரு இந்தியர் கூட இதில் இல்லை. ரூ.1.5 கோடி என்ற அடிப்படை தொகையில் 11 வீரர்கள் பங்கேற்கின்றனர். 1 கோடி என்ற தொகையில் 20 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். மீதமுள்ளவர்கள் ஒரு கோடிக்கு கீழ் ஆகும்.


Click it and Unblock the Notifications