Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மல்லையாவின் "ஜேம்ஸ் பாண்ட்" வில்லாவில் 5 நாட்கள் உலவித் திரி்ந்த கெய்ல்!

டெல்லி: வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு ஓடிப் போய் விட்ட விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கோவா வீட்டில் 5 நாட்கள் செலவிட்ட கதையைக் கூறியுள்ளார் கிறிஸ் கெய்ல்.

"Six Machine: I Don't Like Cricket...I Love It" என்ற பெயரில் சுயசரிதையை எழுதியுள்ள கெய்ல், அதில்தான் இந்த கோவா வில்லா குறித்து விவரி்த்துள்ளார்.

"அத்தாம்" பெரிய வீட்டில் தான் மட்டும் தனியாக 5 நாட்கள் செலவிட்டதாகவும், தனக்குத் துணையாக கிங்பிஷர் பீர் (அது மட்டும்தானா) இருந்ததாகவும் சிலாகித்துக் கூறியுள்ளார் கெய்ல்.

தனது கோவா அனுபவம் குறித்து கெய்ல் கூறியுள்ளதாவது...

ஜார்ஜ் கொடுத்த தகவல்

ஜார்ஜ் கொடுத்த தகவல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மேலாளர் ஜார்ஜ் அவினாஷ்தான் கோவா, கடலோர வில்லா குறித்துக் கூறினார். அப்போது இன்னொரு போட்டிக்கு முன்பு ஐந்து நாட்கள் இடைவெளி இருந்தது. சக வீரர்களும் அப்போது உடன் இல்லை.

போகச் சொன்னார்

போகச் சொன்னார்

என்ன செய்யலாம் என்று ஜார்ஜிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவர் பேசாமல் கோவா வில்லாவுக்கு போய் விட்டு வாருங்கள் என்றார். நான் யோசித்தேன். தனியாக போவதா என்று யோசித்தேன். பிறகு என்ன தப்பாக நடந்து விடும் என்று எண்ணி சரி போகலாம் என்று முடிவு செய்தேன்.

பெரிய வீடு பெரிய அறை

பெரிய வீடு பெரிய அறை

அங்கு போய் இறங்கியதும் காரில் பயணம். இனிய பயணம். கன்டோலிம் பகுதியில் உள்ள அந்த கடலோர வில்லாவுக்குப் போய்ச் சேர்ந்தபோது அருமையாக இருந்தது அந்த பெரிய வீடு. நான் பார்த்த வீடுகளிலேயே பெரிய வீடு. ஹோட்டல்களை விட பெரிய வீடு.

ஜேம்ஸ் பாண்ட் மேன்சன்

ஜேம்ஸ் பாண்ட் மேன்சன்

அதை சாதாரண மேன்சன் என்று கூற முடியாது. ஜேம்ஸ் பாண்ட் மேன்சன், பிளேபாய் மேன்சன். எங்கு பார்த்தாலும் வெள்ளை பளிங்குக் கற்களும் கண்ணாடியும் நிரம்பியிருந்தது.

நானே ராஜா

நானே ராஜா

கூடவே எப்போதும் சிலர் புடை சூழ சென்று வந்த எனக்கு அங்கு தனிமை மிகவும் வித்தியாசமாக இருந்தது. ராஜா போல உணர்ந்தேன். நான் மட்டுமே அங்கு இருந்தேன். முதல் நீச்சல் குளத்தில் குளித்தேன். பிறகு எழுந்து இன்னொரு நீச்சல் குளத்தில் குளித்தேன். இடுப்பில் துண்டைக் கட்டியபடி லானில் நடந்தேன். துணைக்கு கிங் பிஷர் பீர். கிங்பிஷர் வில்லாவில் கிங்பிஷரின் துணையுடன்.

கோல்ப் ஆடினேன்

கோல்ப் ஆடினேன்

கோல்ப் ஆடினேன். விரும்பியபடி உலவினேன். விரும்பியதை சாப்பிட்டேன். என்ன மெனு என்று சமையல்காரரிடம் கேட்டபோது மெனுவெல்லாம் கிடையாது சார். நீங்கதான் மெனு என்றார்.

ரொம்பப் புதுசு

ரொம்பப் புதுசு

உலக நாயகனான எனக்கு இது புதிய அனுபவம். புத்தம் புதிய உலகம் இது. என்ன கேட்டாலும் எனக்குக் கிடைத்தது. அங்கு தனியாக ஒரு தியேட்டர் உள்ளது. அங்கு போனேன். காரேஜுக்குப் போய் அங்கிருந்த கார்களை வேடிக்கை பார்த்தேன்.

பைக்கில் ரவுண்டடித்தேன்

பைக்கில் ரவுண்டடித்தேன்

அங்கிருந்த வாகனங்களிலேயே என்னைக் கவர்ந்தது மூன்று சக்கர ஹார்லி டேவிட்சன் பைக்தான். விஜய் மல்லையாவின் பைக் அது என்று கேள்விப்பட்டேன். அதை ஓட்டி மகிழ்ந்தேன். அப்படி ஒரு பைக்கை நான் ஓட்டியதே இல்லை. மேலும் 3 சக்கரங்களுடன் கூடிய மோட்டார் சைக்கிளை நான் பார்த்தது கூட கிடையாது.

சட்டையைத் திறந்து போட்டு விட்டு

சட்டையைத் திறந்து போட்டு விட்டு

அந்தப் பைக்கை ஓட்டியபோது டெர்மனேட்டர் போல உணர்ந்தேன். சும்மா சட்டையைத் திறந்து விட்டுக் கொண்டு சத்தமாக வண்டியை கிளப்பி ஓட்டி அனுபவித்தேன். ஹெல்மெட் போட்டுக் கொள்ளவில்லை. வெயில் அதிகமாக இருந்தது அப்போது.

கிங் ஆப் தி வில்லா

கிங் ஆப் தி வில்லா

ஓட்டுவதற்கு ஹார்லி, குடிப்பதற்கு கிங்பிஷர் பியர், தங்கியது கிங்பிஷர் வில்லா. அந்த வில்லாவின் ராஜாவாக உணர்ந்தேன். கிங்பிஷர் கிங்காக உணர்ந்தேன்.

யானை சவாரி

யானை சவாரி

தினசரி காலை எழுந்ததும் உங்களுக்கு என்ன வேண்டும். இன்று என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்பார்கள். யானை சவாரி போக வேண்டுமா என்று ஒரு நாள் கேட்டார்கள். நீங்கள் யானை கூட வைத்துள்ளீர்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். அதற்கு யானை இல்லை, ஆனால் யானையை வைத்துள்ளவர் இருக்கிறார் என்றார்கள். யானையும் வந்தது. அதில் ஏறி சவாரி செய்தேன். மெதுவாகத்தான் போனது. ஆனால் ஹார்லி டேவிட்சனின் கம்பீரம் யானையிடம் இருந்தது என்று கூறியுள்ளார் கெய்ல்.

Story first published: Tuesday, June 14, 2016, 18:14 [IST]
Other articles published on Jun 14, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+