Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆமா, பிக்கப் பண்ண பஸ் வருமா.. தினேஷ் கேட்ட கேள்விக்கு தீபிகா சொன்ன பதில்

டெல்லி: என் கணவருக்கு என் மீது மிகுந்த பெருமை. அதை உணர்த்திய தருணத்தை நான் மறக்க முடியாது என்று தீபிகா பல்லிகல் நெகிழ்ச்சியுடன்
தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் எப்படி கிரிக்கெட்டில் பெரிய ஆளோ, அதே போல ஸ்குவாஷில் தீபிகா பல்லிகல் உலக அளவில் ரொம்பப் பிரபலம். இருவரும் இணைந்து இனிமையான வாழ்க்கையை இணைந்து அனுபவித்துக் கொண்டுள்ளனர்.

தீபிகா யூடியூப் மிஸ் பீல்ட் ஷோவுக்கு அளித்த பேட்டியில் தனது கணவர் குறித்து பெருமிதமான பல நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது தனது காதல் கணவர் தன் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளார் என்றும் பெருமிதமாக உள்ளார் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் தீபிகா. தீபிகாவின் பேட்டியிலிருந்து சில துளிகள்...

கிரிக்கெட் போலவே

கிரிக்கெட் போலவே

கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை எந்த அளவுக்கு கடினமானதோ அதே போலதான் ஸ்குவாஷ் வீராங்கனையின் வாழ்க்கையும். இதை தினேஷ் கார்த்திக்கே நேரில் கண்டு அனுபவித்து என்னுடைய சிரமங்களை புரிந்து கொண்டது எனக்கு புதிய அனுபவம்.

மலேசியா பயணத்தின்போது

மலேசியா பயணத்தின்போது

என்னுடன் ஒரு தொடருக்கு மலேசியாவுக்கு வந்திருந்தார். அப்போதுதான் கிரிக்கெட் மட்டும்தான் கஷ்டமானது, மற்ற விளையாட்டுக்கள் ஈசியானது என்று தான் நினைத்தது எந்த அளவுக்கு தவறு என்பதை அவர் உணர முடிந்தது. ஸ்குவாஷும் மிகக் கடினமான விளையாட்டு என்பதை மலேசியாவில் அவர் நேரிலேயே உணர்ந்தார்.

பஸ் வராது

பஸ் வராது

மலேசிய தொடருக்கு வந்திருந்தபோது போட்டி நடக்கும் அரங்குக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது என்னிடம் அவர் நம்மை கூட்டிச் செல்ல பஸ் வருமா என்று கேட்டார். அதற்கு நான் ம்ஹூம் வராது என்றேன். நாமாகத்தான் செல்ல வேண்டும் என்றேன். அதைக் கேட்டு அவர் அதிர்ந்தார். என் மீதான மதிப்பும், மரியாதையும் அவருக்குக் கூடியது. என்னுடைய போராட்டங்களை அவர் உணர்ந்து கொண்டார். அதையும் தாண்டி நான் சாதிப்பதை நினைத்து பெருமிதம் கொண்டார் என்றார் தீபிகா.

தீபிகா தங்கம்

தீபிகா தங்கம்

27 வயதான தீபிகா 2018 காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற சாதனையாளர் ஆவார். இது தவிர பல்வேறு பட்டங்களையும அவர் வென்றுள்ளார். 2014 காமன்வெல்த் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் தட்டியவர் தீபிகா.

அதிரடி நாயகன்

அதிரடி நாயகன்

தினேஷ் கார்த்திக் 26 டெஸ்ட், 86 ஒரு நாள் போட்டிகளில் ஆடியவர். 21 டி20 போட்டிகளிலும் கலக்கியவர். இடையில் அவருக்கு அணியில் நிலையான இடம் கிடைக்காமல் போய் விட்டது. ஆனால் கிடைத்த வாய்ப்புகளில் அவர் கலக்கத் தவறியதில்லை. ஐபிஎல் போட்டிகளிலும் கடந்த முறை பிரமாதமாக ஆடியவர் தினேஷ் கார்த்திக்.

Story first published: Wednesday, October 10, 2018, 12:19 [IST]
Other articles published on Oct 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+