எதிரணி விட்ட போதெல்லாம் சதம் தொட்ட சாதனை வீரர்... வங்கதேச ஆட்டத்திலும் அதே அசத்தல்
Recommended Video
எட்ஜ்பாஸ்டன்: 4 முறை கேட்சுகளில் இருந்து தப்பிய ரோகித் சதம் கண்டு சாதனை படைத்தார். கேட்ச் வாய்ப்புகளில் இருந்து தப்பிய போது எல்லாம் அவர் சாதனை கண்டிருக்கிறார்.
இங்கிலாந்து உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான பேட்டிங்கிற்கு முக்கிய காரணமாக கருதப்படுபவர் ரோகிர் சர்மா. அவர் இதுவரை ஆடிய 7 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இதுவரை 544 ரன்கள் குவித்திருக்கிறார்.
அவர் அளித்த வாய்ப்புகளை எதிரணியினர் தவறவிட்ட போதெல்லாம் சாதனையுடன் தான் அவர் பெவிலியன் திரும்பி இருக்கிறார். அதாவது, இந்த உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா அரைசதம், சதம் அடித்திருக்கும் அனைத்து போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களில் இருக்கும்பொழுது கேட்ச் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.

பெரிய ஸ்கோர்
ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்புகளை எதிரணி வீரர்கள் கோட்டை விட்டுள்ளனர். அதற்கு பிறகு தான் ரோகித், மிகப்பெரிய ஸ்கோரை எட்டியிருக்கிறார். லேட்டஸ்ட் உதாரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை குறிப்பிடலாம்.

சதமடித்து அசத்தல்
ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் ரோகித் சர்மா 4 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்சை தவறவிட்டார் ரூட். அதன்பிறகு, ரோகித் சதமடித்து அசத்தியதை மறக்க முடியாது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் இதே நிலை தான்.

122 ரன்கள் குவிப்பு
அந்த அணிக்கு எதிராக 1 ரன் இருக்கையில் ஆட்டமிழக்காமல் தப்பித்தார். அதே போட்டியில் அவர் வெளுத்து எடுத்தது 122 ரன்கள். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2 ரன்கள் இருக்கையில் அதிர்ஷ்ட வசமாக தப்பித்தார். அதே போட்டியில் 57 ரன்கள் அடித்தார்.

101 ரன்கள் எடுத்த ஹிட்மேன்
இங்கிலாந்துக்கு எதிராக 4 ரன்கள் இருக்கையில் தவறவிட்டனர். அதே போட்டியில் 101 ரன்கள் அடித்தார். வங்கதேசத்துக்கு எதிராக 9 ரன்கள் எடுத்த போது அவுட்டாகாமல் தப்பித்தார். ஸ்கோர் போர்டில் அவரது கணக்கில் 104 ரன்கள் சேர்ந்தது.


Click it and Unblock the Notifications